scorecardresearch

ரூ.83 வீதம் முதலீடு செய்து ரூ.9.50 லட்சம் ரிட்டன் எடுக்கலாமா?

ஜீவன் ஆனந்த் இந்தியாவின் எல்ஐசியின் மிகவும் பிரபலமான திட்டங்களில் ஒன்றாகும்.

Invest once and get Rs 9,000 monthly income for 5 years
ஒரு கணக்கிற்கு, திட்டத்தில் ரூ.9 லட்சம் வைப்புத் தொகையாக இருந்தால், மாதாந்திர வட்டி வருமானம் ரூ.5,325 கிடைக்கும்.

நல்ல வருமானம் மற்றும் காப்பீட்டுத் தொகையை வழங்கும் புதுமையான திட்டங்களுக்காக எல்ஐசி நிறுவனம் அறியப்படுகிறது. மேலும், குறிப்பிட்ட சில திட்டங்களுக்கு இது வரிச் சலுகைகளையும் வழங்குகிறது.

எல்ஐசி ஜீவன் ஆனந்த் திட்டம்

இன்று, எல்.ஐ.சி ஜீவன் ஆனந்த் பாலிசி பற்றி பார்க்கலாம். பொதுவாக ஜீவன் ஆனந்த் எல்ஐசியின் மிகவும் பிரபலமான திட்டங்களில் ஒன்றாகும்.

இந்தப் பாலிசியில் குறைந்த முதலீடு செய்து நல்ல லாபம் பெறலாம். மேலும், பாலிசி காலம் நிறைவுற்ற பின்னர், எந்தப் பிரீமியமும் செலுத்த வேண்டியது இல்லை. எல்ஐசி ஜீவன் ஆனந்தை பயன்படுத்தி லட்சங்களை சம்பாதிக்கலாம்.

ரூ.9.50 லட்சம் ரிட்டன்

அந்த வகையில், உங்களுக்கு 35 வயதாகி விட்டது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள், 20 வருட பாலிசி எடுத்தால் வருடத்திற்கு ரூ.30,000 செலுத்த வேண்டும்.

இது மாதத்திற்கு ரூ.2500 அல்லது ஒரு நாளைக்கு ரூ.83 ஆகும். இதன்மூலம் 20 ஆண்டுகளில் நீங்கள் ரூ.6 லட்சம் வரை செலுத்தியிருப்பீர்கள். உங்களுக்கு ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் ரிட்டன் கிடைக்கும்.

திட்டத்தின் இதர தகவல்கள்

இது தவிர, துரதிர்ஷ்டவசமான மரணம் ஏற்பட்டால், அந்த நபரின் குடும்பம் இறப்பின் மீதான காப்பீட்டுத் தொகையைப் பெறுவார்கள். இது அடிப்படைத் தொகையின் 125 சதவீதம் அல்லது வருடாந்திர பிரீமியத்தின் 7 மடங்குக்கு சமமாக இருக்கும்.

இந்தத் திட்டத்தில் குறைந்தப்பட்ச Sum Assured ரூ.1 லட்சம் ஆகும். கடன் வசதியும் வழங்கப்படுகிறது. 18 வயது பூர்த்தி அடைந்த நபர்களும் 50 வயதுக்கு உட்பட்ட நபர்களும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

இந்தத் திட்டம் குறைந்தப்பட்சம் 15 ஆண்டுகள் முதல் அதிகப்பட்சம் 35 ஆண்டுகள் வரை கிடைக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Lic jeevan anand invest rs 83 pd get rs 9 lakh

Best of Express