LIC புதிய ஜீவன் ஆனந்த் திட்டத்தில், பாலிசிதாரர் இயலாமை நன்மைக்கான ரைடர் அல்லது விபத்து பலன் ரைடர் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்யலாம்.
தகுதி நிபந்தனைகள்:
1) குறைந்தபட்ச அடிப்படைத் தொகை ` 100000
2) அதிகபட்ச அடிப்படைத் தொகைக்கு வரம்பு இல்லை
3) குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள்
4) அதிகபட்ச வயது 50 ஆண்டுகள்
5) அதிகபட்ச முதிர்வு வயது 75 ஆண்டுகள்
6) குறைந்தபட்ச பாலிசி காலம் 15 ஆண்டுகள்
7) அதிகபட்ச பாலிசி காலம் 35 ஆண்டுகள்
ரூ.25 லட்சம் ரிட்டன் பெறுவது எப்படி?
ஜீவன் ஆனந்த் பாலிசியின் மூலம், நீங்கள் ரூ. 25 லட்சம் வரை ரிட்டன் பெறலாம். இந்தப் பாலிசியில் 35 வருடங்கள் முதலீடு செய்து இதனை நீங்கள் சாத்தியமாக்கலாம்.
இதற்கு மாதத்திற்கு ரூ.1,358 அல்லது ஆண்டுக்கு ரூ.16,300 செலுத்த வேண்டும். அதாவது ஒரு நாளைக்கு சுமார் 45 ரூபாய் மட்டுமே முதலீடு ஆகும்.
மேலும் இந்தத் திட்டத்தில் பாலிசிதாரர் முதிர்வுக்கு முன் இறந்துவிட்டால், பாலிசிதாரரின் நாமினி 12% வரை இறப்புப் பலனைப் பெறுவார்.
இந்தக் கொள்கையின் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ. 1 லட்சம் ஆகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/