இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி), எல்ஐசி ஜீவன் ஆசாத் (எண். 868) திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது, இது தனிநபர் சேமிப்பு மற்றும் ஆயுள் காப்பீட்டை இலக்காகக் கொண்ட புதிய திட்டமாகும்.
மேலும், இந்தத் திட்டம் கவர்ச்சிகரமான பாதுகாப்பு மற்றும் சேமிப்புகளை வழங்குகிறது. இதுமட்டுமின்றி, இது ஒரு வரையறுக்கப்பட்ட கால பேமெண்ட் எண்டோவ்மென்ட் திட்டமாகும், இது பாலிசி காலத்தின் போது துரதிர்ஷ்டவசமாக ஆயுள் காப்பீட்டாளர் இறந்தால் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்குகிறது.
காப்பீடு
மேலும், சேமிப்பின் மீது கடனும் பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது. இந்தத் திட்டத்தில், குறைந்தபட்ச அடிப்படை காப்பீட்டுத் தொகை ரூ. 2 லட்சம் மற்றும் அதிகபட்ச அடிப்படை காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சம் ஆகும். பாலிசியை 15 முதல் 20 ஆண்டுகள் வரை எடுக்கலாம்.
வயது
எல்ஐசி ஜீவன் ஆசாத் திட்டத்தில் பிறந்து 90 நாள்கள் ஆன குழந்தைகள் முதல் 50 வயதுடையவர்கள் முதலீடு செய்யலாம். பிரீமியத்தை ஆண்டு, அரையாண்டு, காலாண்டு அல்லது மாதாந்திர இடைவெளியில் முறையாக செலுத்தலாம்.
இறப்பு பலன்
பாலிசி முதிர்வுத் தேதிக்கு முன், ஆயுள் காப்பீடு செய்யப்பட்டவரின் இறப்புக்கு இறப்புப் பலன் அளிக்கப்படும். இறப்பு பலன் "இறப்பில் உறுதியளிக்கப்பட்ட தொகை" ஆகும்.
மேலும், இறப்புப் பலன் இறந்த தேதி வரை செலுத்தப்பட்ட மொத்த பிரீமியத்தில் 105% க்கும் குறைவாக இருக்கக்கூடாது” என்பதும் எல்ஐசி விதி ஆகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/