LIC Jeevan Labh Policy : தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்பு குறித்து அதிகம் சிந்திக்கும் நபர்கள் நீங்கள் என்றால் உங்களின் பணம் பாதுகாப்பற்ற பங்கு வர்த்தகம் நோக்கி செல்வதை நீங்கள் விரும்பவில்லை என்றால் நீங்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். LIC Jeevan Labh 836 என்ற இந்த திட்டம் உங்கள் குழந்தையின் படிப்பு, எதிர்காலம் மற்றும் வீடு கட்டுதல், நிலம் வாங்குதல் போன்ற பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.
10 வருடங்கள், 15 வருடங்கள், மற்றும் 16 வருடங்கள் என மூன்று Paying Term-களில் வருகின்றன. இந்த பாலிசியை வாங்கும் நபர் இப்போது தான் சம்பாதிக்க துவங்குகிறார் என்றால் 25 வருடங்கள் மெச்சூரிட்டியுடன் கூடிய 16 வருட பி.பி.டி. பாலிசியை எடுப்பது மிகவும் நல்லது.
மூன்று வருடங்களுக்கான ப்ரீமியமை முழுமையாக பயனாளர் செலுத்தியிருக்கும் பட்சத்தில் இந்த திட்டத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு ஒருவர் கடன் கூட வாங்க இயலும்.
இந்த பாலிசியின் விபரம்
இந்த பாலிசி வைத்திருக்கும் நபர் மெச்சூரிட்டி பயன்கள், எதிர்பாராத இறப்புக்கான பெனஃபிட்கள் மற்றும் ரிவெர்ஷனரி போனஸ் மற்றும் கூடுதல் போனஸ் போன்ற பலன்களை பெறுவார்.
இது எப்படி செயல்படும் என்று பார்ப்போம்
இந்த பாலிசி துவங்கும் போது ஒருவரின் வயது 23 என வைத்துக் கொள்வோம். அவர் 10 ஆண்டுகள் பி.பி.டிக்கான பாலிசி டெர்ம்களை 16 வருடமாக தேர்வு செய்திருந்தால் எதிர்பாராத இறப்பின் மூலம் கிடைக்கும் பயன்கள் ரூ. 10 லட்சமாகவும், அடிப்படை மெச்சூரிட்டி பயன்கள் ரூ. 10 லட்சமாகவும் கிடைக்கும்.
முதல் ஆண்டுக்கான ப்ரீமியம் செலுத்தும் முறை குறித்து இங்கே காண்போம். மற்ற எல்.ஐ.சி. பாலிசிகளை போன்றே இந்த திட்டத்திலும் ப்ரீமியம் தொகைக்கான 4.5% வட்டியை ப்ரீமியத்துடன் எல்.ஐ.சி. எதிர்பார்க்கின்றது. இந்த ப்ரீமியத்தை நீங்கள் ஆண்டு, அறையாண்டு, மாதாந்திர மற்றும் தினசரி முறையிலும் செலுத்திக் கொள்ளலாம்.
Annual premium: Rs 87,200 (Rs 83,445 + Rs 3,755)
அரையாண்டுக்கான ப்ரீமியம் : Rs 44,046 (Rs 42,149 + Rs 1,897)
காலாண்டுக்கான ப்ரீமியம் : Rs 22,246 (Rs 21,288 + Rs 958)
மாதாந்திர ப்ரீமியம் : : Rs 7,415 (Rs 7,096 + Rs 319)
தினசரியாக செலுத்த நேரிடும் பட்சத்தில் : Rs 238
இரண்டாம் ஆண்டில் இருந்து நீங்கள் செலுத்தும் ப்ரீமியம் மதிப்பு இவ்வாறு இருக்கும்
வருடாந்திர ப்ரீமியம் : Rs 85,323 (Rs 83,445 + Rs 1,878)
அரையாண்டுக்கான ப்ரீமியம் : Rs 43,097 (Rs 42,149 + Rs 948)
காலாண்டுக்கான ப்ரீமியம் : Rs 21,767 (Rs 21,288 + Rs 479)
மாதாந்திர ப்ரீமியம் : Rs 7,256 (Rs 7,096 + Rs 160)
தினசரியாக செலுத்த நேரிடும் பட்சத்தில் : Rs 233
16 வருடங்கள் நீங்கள் இவ்வாறு ப்ரீமியம் செலுத்தி முடித்த பிறகு உங்களுக்கு கிடைக்கும் அஸ்ஸூர்ட் சம் மதிப்பு 10 லட்சம் + நெட் போனஸ் 6,88,000 + இறுதி கூடுதல் போனஸ் 25,000 + செலுத்தப்பட்ட நெட் ப்ரீமியம் 8,55,107 என்று உங்களுக்கு மொத்தமாக பணம் திருப்பி செலுத்தப்படும். அதாவது ஒரு பாலிசி ஹோல்டர் மாதத்திற்கு ரூ. 7256 பணத்தை 16 ஆண்டுகள் செலுத்தும் பட்சத்தில் அவருடைய கையில் 17.13 லட்சம் கிடைக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil