Advertisment

LIC Jeevan Labh Policy: எல்ஐசி வழங்கும் ஜீவன் லாப் பாலிசி திட்டம்! முழு விவரம் இதோ

LIC Jeevan Labh Policy

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
LIC Jeevan Labh Policy

LIC Jeevan Labh Policy

LIC Jeevan Labh Policy: எல்.ஐ.சி. ஜீவன் லாப் என்பது இந்தியாவின் ஆயுள் காப்பீட்டு கழகம் அளிக்கும் ஆயுள் காப்பீடு திட்டங்களில் ஒன்றாகும். இது வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளுடன் சேவையாற்றுவதற்காக என்டௌமெண்ட் திட்டத்துடன் இணைக்கப்படாமல் வெளி வரும் வரையறுக்கப்பட்ட பிரீமியம் செலுத்தும் திட்டமாகும். பாதுகாப்பு மற்றும் சேமிப்பு இரண்டையும் இணைந்து வழங்குகிறது. 8-59 வயதுக்குள் இருக்கும் மக்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ள முடியும்.

Advertisment

இது ஒரு அடிப்படை என்டௌமெண்ட் திட்டமாகும். அதாவது நீங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் பிரீமியம் செலுத்தும் போது, பாலிசி கால வரையின் முடிவில், முதிர்ச்சி சலுகைகளை பெற முடியும். பாலிசி கால வரையின் போது எந்த நேரத்திலும் பாலிசிதாரரின் இறப்பு ஏற்பட்டால், நியமனதாரருக்கு இறப்பு சலுகைகளானது வழங்கப்படும்.

எல்.ஐ.சி.ஜீவன் லாப் முக்கிய அம்சங்கள்

இந்த திட்டம் 16 ஆண்டுகள், 21 ஆண்டுகள் அல்லது 25 ஆண்டுகள் போன்ற பல்வேறு விருப்பங்களுடன் காப்பீட்டு உரிமையை தேர்வு செய்ய உங்களுக்கு அனுமதி கொடுக்கிறது.

வருடாந்திர பிரீமியத்திற்கு 2% மற்றும் அரை வருட பிரீமியத்திற்கு கட்டணங்களின் மீது 1% தள்ளுபடியை வழங்குகிறது. மேலும், உறுதியளிக்கப்பட்ட தொகையானது ரூபாய் 5 லட்சத்திலிருந்து 9.9 லட்சம் வரைக்கும் இருக்கும் போது 1.25% தள்ளுபடியை வழங்குகிறது. உறுதியளிக்கப்பட்ட தொகையானது ரூபாய். 10 லட்சத்திலிருந்து ரூபாய். 14 லட்சம் வரைக்கும் இருந்தால் 1.50% தள்ளுபடியை வழங்குகிறது. உறுதியளிக்கப்பட்ட தொகை 15 லட்சம் மற்றும் அதற்கு மேலே இருந்தால் 1.75% தள்ளுபடியை வழங்குகிறது.

ஜீவன் லாப் தகுதி வரன்முறை

உறுதியளிக்கப்பட்ட தொகை

குறைந்தபட்சம் - 2,00,000

அதிகபட்சம் - வரம்பு இல்லை

பாலிசி செலுத்தும் காலம்(ஆண்டுகளில்)

16 ஆண்டுகளுக்கான பாலிசி திட்டத்தில் 10 ஆண்டுகள்

21 ஆண்டுகளுக்கான பாலிசி திட்டத்தில் 15 ஆண்டுகள்

25 ஆண்டுகளுக்கான பாலிசி திட்டத்தில் 16 ஆண்டுகள்

வயது வரம்பு

16 ஆண்டுகள் பாலிசிக்கு நுழைவு வயது 8(நிறைவு), முதிர்ச்சி வயது 59

21 ஆண்டுகள் பாலிசிக்கு நுழைவு வயது 8(நிறைவு), முதிர்ச்சி வயது 54

25 ஆண்டுகள் பாலிசிக்கு நுழைவு வயது 8(நிறைவு), முதிர்ச்சி வயது 50

ஆண்டு பிரீமியம் (20 ஆண்டுகளுக்கு)

ரூபாய். 17450

ரூபாய். 17,512

ரூபாய். 17,779

ஆண்டு பிரீமியம் (30 ஆண்டுகளுக்கு)

ரூபாய். 11,163

ரூபாய். 11,255

ரூபாய். 11634

ஆண்டு பிரீமியம் (40 ஆண்டுகளுக்கு)

ரூபாய். 9411

ரூபாய். 9545

ரூபாய். 10,015

பாலிசிதாரரால் செலுத்தப்படாத பிரீமியத்தின் முதல் தேதியிலிருந்து 2 ஆண்டுகளுக்கு புதுப்பித்தல் காலத்தை வழங்குகிறது. நிலுவை தொகை, வட்டி போல் பிற செலவினங்களையும் செலுத்துவதன் மூலம் பாலிசியை புதுப்பிக்க முடியும்.

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment