எல்ஐசி காப்பீடு, முதலீடு வளர்ச்சி திட்டங்களை கொண்டுள்ளது. இது காப்பீடு மற்றும் செல்வத்தை உருவாக்கும் திட்டங்களுடன் வருகிறது.
இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் ஒரு நல்ல ஓய்வூதிய கார்பஸை உருவாக்கலாம். எல்ஐசிக்கு நீண்ட கால முதலீடுகள் தேவை என்பது ஒரே ஒரு குறை.
இருப்பினும், பலன்களும் அதிகம். இன்று, எல்ஐசியின் ஜீவன் பிரகதி பீமா யோஜனாவைப் பற்றி பார்க்கலாம்.
எல்ஐசி ஜீவன் பிரகதி பீமா யோஜனாவில், ஒரு நபர் தினமும் ரூ. 200 முதலீடு செய்தால், முதிர்வு நேரத்தில் ஒரு லட்சத்தை உருவாக்க முடியும். ஜீவன் பிரகதி திட்டத்தின் காலம் 12 முதல் 20 ஆண்டுகள் ஆகும்.
உதாரணமாக ரூ.200 வீதம் ஒவ்வொரு மாதமும் ரூ.6000 முதலீடு செய்தால், ஆண்டுக்கு ரூ.72,000 முதலீடு செய்திருப்பீர்கள். இந்தப் பாலிசியின் ஒரு நன்மை என்னவென்றால், நீங்கள் முதலீடு செய்த காலத்துடன் அதன் ரிஸ்க் கவரும் அதிகரிக்கிறது. அதனால் ரிஸ்க் கவர் மற்றும் இன்சூரன்ஸ் தொகை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
உதாரணமாக, நீங்கள் ரூ.4 லட்சம் பாலிசியை எடுத்திருந்தால், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தத் தொகை ரூ.5 லட்சமாக மாறும்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தத் தொகை ரூ.6 லட்சமாகவும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தத் தொகை ரூ.7 லட்சமாகவும் மாறும்.
பாலிசிதாரர் இறந்தால், இந்தத் தொகை அந்த நபரின் நாமினிக்கு வழங்கப்படும். அந்த வகையில், ஒவ்வொரு மாதமும் ரூ.6000 முதலீடு செய்தால், 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.28 லட்சம் கிடைக்கும்.
12 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் இந்த பாலிசியில் முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ. 1.5 லட்சம் மற்றும் அதிகபட்ச தொகைக்கு வரம்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/