காப்பீடு செய்ய வேண்டும் என்று நாம் நினைத்தாலே நம்முடைய மனதில் உடனே தோன்றுவது எல்.ஐ.சி. தான். மிகவும் குறைவான அபாயங்களை கொண்டிருப்பதால் பல தரப்பட்ட மக்களின் விருப்பமான நிறுவனமாக எல்.ஐ.சி. இருக்கிறது. கோடிக்கணக்கான மக்கள் இந்த நிறுவனத்தை நாடவும் இது காரணமாக அமைந்துள்ளது.
அப்படியான காப்பீட்டுத் திட்டங்களில் ஒன்று தான் ஜீவன் ஷிரோமணி (Jeevan Shiromani). எல்.ஐ.சியின் ஜீவன் ஷிரோமணி திட்டம் 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் தேதி அன்று வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மிகவும் குறைவான ப்ரீமியம் கொண்ட Money Back திட்டமாகும்.
இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் ரூ. 1 கோடி சம் அஸ்ஸூரன்ஸை பெற முடியும் என்கிறது எல்.ஐ.சி. பங்குசந்தையுடன் இணைக்கப்பட்டுள்ள திட்டமான இதில் நீங்கள் 14 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும் பட்சத்தில் ரூ. ஒரு கோடி வரை ரிட்டர்ன்ஸை பெற இயலும்.
எச்.என்.ஐ. எனப்படும் அதிக நெட் வொர்த் கொண்டுள்ள தனிநபர்களுக்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. காப்பீடு நிறைவடைவதற்கு முன்பே பாலிசிதாரர் இறக்கும் பட்சத்தில் அவருடைய குடும்பத்தினர் இந்த திட்டத்தின் மூலம் நிதி ஆதரவை பெற இயலும். காப்பீடு காலம் முடியும் போது பாலிசிதாரர் மிக அதிக அளவில் மொத்த தொகையை திரும்பிப் பெற இயலும்.
14 ஆண்டு பாலிசியில் 10 மற்றும் 12வது ஆண்டுகளில் 30% காப்பீட்டு தொகை வழங்கப்படும்
16 ஆண்டு பாலிசியில் 12 மற்றும் 14வது ஆண்டுகளில் 35% காப்பீட்டு தொகை வழங்கப்படும்
18 ஆண்டு பாலிசியில் 14 மற்றும் 16வது ஆண்டுகளில் 40% காப்பீட்டு தொகை வழங்கப்படும்
20 ஆண்டு பாலிசியில் 16 மற்றும் 18வது ஆண்டுகளில் 45% காப்பீட்டு தொகை வழங்கப்படும்
பாலிசி காலத்தின் போது, பாலிசியின் சரண்டர் மதிப்பின் அடிப்படையில் வாடிக்கையாளர் கடன் பெறலாம் என்பது இதன் கூடுதல் சிறப்பாக உள்ளது. ஆனால் இந்த கடன் எல்ஐசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும். அவ்வபோது தீர்மானிக்கப்படும் வட்டியின் அடிப்படையில் கடன்கள் வழங்கப்படும்.
நீங்கள் மேலும் அறிந்து கொள்ள வேண்டியவை என்ன?
குறைந்தபட்ச ரிட்டர்ன்ஸ் - ரூ. 1 கோடி; அதிகபட்ச வரம்பு ஏதும் இல்லை. பாலிசி காலம் 14 வருடங்கள், 16 வருடங்கள், 18 வருடங்கள் மற்றும் 20 வருடங்கள் ஆகும். ப்ரீமியம் செலுத்தும் காலம் 4 ஆண்டுகள் மட்டுமே. ஒருவர் 18 வயது பூர்த்தி அடைந்திருக்கும் பட்சத்தில் இந்த பாலிசியை எடுக்க இயலும். இந்த பாலிசியை எடுக்க அதிகபட்ச வயது வரம்பு 55 (14 வருட பாலிசிக்கு), 51 வயது (16 வருட பாலிசிக்கு), 48 வயது (18 வருட பாலிசிக்கு), 45 வயது (20 வருட பாலிசிக்கு)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.