நம்முடைய வருங்காலம் நிதி ரீதியான பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க நம்மால் முடிந்த வரையில் சேமிக்க துவங்கும்வோம். சிலர் மியூச்சுவல் ஃபண்ட்ஸ், க்ரிப்டோ கரன்ஸி, பங்கு சந்தை என்று இறங்குவார்கள். ஆனால் குறைவான வருமானம் கொண்ட நபர்களுக்கு இந்த பங்கு சந்தை விவகாரம் என்றுமே புரியாத புதிர் தான்.
அவர்கள் பலரின் பெரும்பாலான சேமிப்பு தேர்வு என்பது ரிஸ்க் இல்லாத முதலீட்டு திட்டங்கள் மற்றும் கணிசமான ரிட்டர்ன்ஸ் மட்டுமே. அப்படியான ஒரு சேமிப்பு திட்டம் தான் எல்.ஐ.சி. வழங்கும் ஜீவன் உமாங் திட்டம். மாதத்திற்கு நீங்கள் ரூ. 1302 செலுத்தினால் போது உங்களுக்கு கிடைக்கு ரிட்டர்ன்ஸ் ரூ. 28 லட்சம் வரை கிடைக்கும். இந்த திட்டத்தை துவங்க என்ன தகுதிகள் தேவை, வரம்புகள் என்ன, மெச்சூரிட்டி காலம் என்ன என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.
நீங்கள் 15, 20, 25 அல்லது 30 ஆண்டுகளுக்கான பாலிசியை நீங்கள் வாங்கலாம். விபத்து ஏற்படும் போது இந்த திட்டம் பாலிசிதாரருக்கு பயன்களை தரும். ஒருவேளை அவர் இறந்துவிட்டால் அவருடைய உறவினர்களுக்கு இந்த திட்டம் பலன் தரும். இந்த பாலிசியில் முதலீடு செய்தால் வருமானவரி விலக்கும் உங்களுக்கு உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நீங்கள் நூறு ஆண்டுகளுக்கு இந்த பாலிசியை எடுத்தால் அந்த பாலிசியின் ப்ரீமியம் ரூ. 28 லட்சமாக இருக்கும். மாதம் நீங்கள் ரூ. 1302 கட்டினால் போதுமானது. நீங்கள் இறந்த பிறகு உங்களின் குடும்பத்தினருக்கு இந்த பணம் ஒப்படைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களின் மறைவுக்கு பிறகு உங்கள் குடும்பத்தை நிதி ரீதியாக நிலைத்தன்மையுடன் வழிநடத்த நீங்கள் விரும்பினால் இது உங்களுக்கான திட்டம் தான்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil