lic-policy | எல்ஐசியின் ஜீவன் உமாங் திட்டம் உங்கள் குடும்பத்திற்கு வருமானம் மற்றும் பாதுகாப்பை வழங்குகிறது. பிரீமியம் செலுத்தும் காலத்தின் முடிவில் இருந்து முதிர்வு வரை, இந்தத் திட்டம் ஆண்டுதோறும் உயிர்வாழும் பலன்களை வழங்குகிறது.
இது முதிர்வு காலத்தின் போது அல்லது பாலிசிதாரர் பாலிசி காலத்தின் போது காலாவதியானால் ஒரு மொத்த தொகையை வழங்குகிறது.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்
- இந்த எல்ஐசி திட்டத்தின் கீழ் வருடாந்திர உயிர்வாழ்வு பலன்கள் பிரீமியம் செலுத்தும் காலத்தின் முடிவில் தொடங்கி முதிர்வு வரை தொடரும்.
- எல்ஐசி ஜீவன் உமாங் திட்டத்திற்கான நுழைவு வயது 90 நாட்கள் மற்றும் அதிகபட்சம் 55 ஆண்டுகள்.
- பாலிசி காலம்: 100 ஆண்டுகள்
- இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ. 2,00,000 மற்றும் அதிகபட்சம் வரம்பு இல்லை.
ரூ.36 ஆயிரம் பென்ஷன் பெறுவது எப்படி?
ரூ.4.5 லட்சம் காப்பீட்டுத் தொகைக்கு 26 வயதில் எல்ஐசி ஜீவன் உமாங் பாலிசியில் பதிவு செய்தால், ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.1,350 அல்லது ஒரு நாளைக்கு ரூ.45 செலுத்த வேண்டும்.
இதில், உங்கள் வருடாந்திர பிரீமியம் ரூ. 15,882 ஆகவும், 30 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் பிரீமியம் ரூ.47,6460 ஆகவும் இருக்கும்.
30 வருடங்கள் தொடர்ந்து பிரீமியம் செலுத்திய பிறகு, 31வது ஆண்டில் உங்கள் முதலீட்டின் வருமானமாக எல்ஐசி ஆண்டுக்கு ரூ.36,000 டெபாசிட் செய்யத் தொடங்கும். நீங்கள் முதலீடு செய்த 31வது வருடத்தில் இருந்து 100 வயதை எட்டும் வரை ஒவ்வொரு வருடமும் ரூ.36,000 வருமானம் கிடைக்கும். மொத்தம் ரூ.36 லட்சத்தை நீங்கள் சேமித்திப்பீர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“