இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான, எல்ஐசி பல்வேறு காப்பீட்டு திட்டங்கள் மற்றும் ஓய்வூதிய திட்டங்களை வழங்கி வருகின்றது. அதில் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்றுதான் எல்ஐசி கன்யாதான் பாலிசி திட்டம்(Kanyadan Policy). இந்த திட்டம் பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பெற்றோருக்கு வரப்பிரசாதம் தான்.
இந்த எல்ஐடி போலிசி எடுக்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் திருமண செலவு என்ற கவலை உங்களை விட்டு நிச்சயம் மறைந்துவிடும்.இந்த திட்டம் தொடர்பான அனைத்து தகவல்களையும் இச்செய்தி தொகுப்பில் காணலாம்.
தேவையான ஆவணங்கள்
ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ், அடையாள அட்டை, முகவரிச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவை கண்டிப்பாக தேவை. இத்துடன் கூடுதலாக, கையொப்பமிடப்பட்ட விண்ணப்பப் படிவம் மற்றும் முதல் பிரீமியத்திற்கான காசோலை அல்லது ரொக்கம் மற்றும் பிறப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
எந்த வயதில் இணையலாம்
இந்த திட்டத்தில் இணைய குறைந்தபட்சம் பெண் குழந்தைக்கு ஒரு வயது எட்டியிருக்க வேண்டும், பெற்றோருக்கு 30 வயது ஆகியிருக்க வேண்டும். இது 25 வருட திட்டமாகும். ஆனால் நீங்கள் 22 வருடங்களுக்கு பிரீமியம் செலுத்த வேண்டும். இந்த பாலிசி பெண் குழந்தையின் வயதைப் பொறுத்து வெவ்வேறு திட்டங்களில் கிடைக்கிறது. அனைத்து திட்டத்தில் பணம் செலுத்தும் காலம் மாறுபடாது. மாறாக, நாம் செலுத்தும் பிரீமியம் தொகை அதிகரிக்கக்கூடும்
இறப்பிலும் பலன் தரும் பாலிசி
பாலிசி எடுத்த பிறகு, சில காரணங்களால் பாலிசிதாரர் ஒருவேளை இறந்துவிட்டால், மீதமுள்ள பிரீமியத் தொகையை குடும்பத்தினர் செலுத்த வேண்டியதில்லை.மரணம் விபத்தால் நடந்தால், குடும்பத்திற்கு மொத்தமாக ரூ .10 லட்சம் கிடைக்கும். அதே சமயம், இயற்கையாக மரணம் நிகழ்ந்தால், குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் கிடைக்கும்.இதுமட்டுமின்றி, திட்டம் முதிர்ச்சியடையும் வரை குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ .50,000 கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரீமியம் எவ்வளவு?
இந்தத் திட்டத்தின் படி, நீங்கள் தினமும் 121 ரூபாய் செலுத்த வேண்டும் அல்லது மாதம் 3600 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த முறையில் நீங்கள் 22 ஆண்டுகள் பணம் செலுத்தினால், திட்டம் முதிர்ச்சியடையும் போது 27 லட்சம் ரூபாய் உங்களின் கையில் கிடைக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil