ஆண், பெண் பாலின இடைவெளியை சரி செய்வதற்கும், சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றை வலியுறுத்துவதற்கும் பெண் குழந்தைகளின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இந்திய அரசாங்கத்தால் பல்வேறு நிதித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
1) செல்வ மகள் சேமிப்புத் திட்டம் (சுகன்யா சம்மிரிதி யோஜனா)
பெண் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பொருந்தும்.
ரூ.250 செலுத்தி திட்டத்தை தொடங்கலாம். ஒரு நிதியாண்டில் திட்டத்தில் ரூ.1.5 லட்சம் வரை அதிகப்பட்சமாக முதலீடு செய்யலாம். பெண் குழந்தையின் 21 வயதில் திட்டம் பூர்த்தி ஆகும்.
2) சி.பி.எஸ்.இ உதான் திட்டம்
இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வரும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், பெண் குழந்தைகளுக்கான சிபிஎஸ்இ உதான் திட்டத்தை நிர்வகிக்கிறது.
இந்த திட்டம் இந்தியா முழுவதும் உள்ள சிறந்த பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பள்ளிகளில் சேரும் பெண் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயல்கிறது.
இந்தத் திட்டம் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் உள்ள பெண் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
3) எல்ஐசி கன்யாதன் பாலிசி
எல்ஐசி கன்யாதன் பாலிசி, இளம் பெண்களைப் பாதுகாப்பதில் வலுவான முக்கியத்துவத்துடன் நிறுவப்பட்டது.
பெண் குழந்தையின் பெற்றோர் அருகில் இல்லாத போது, பாலிசி உங்கள் அன்புக்குரியவர்களுக்கு உடனடியாக ஒரு பெரிய தொகையை வழங்குகிறது,
மேலும் அவர்களின் பள்ளிப்படிப்புக்காக ஒவ்வொரு ஆண்டும் கணிசமான தொகையை செலுத்துகிறது.
4) நந்த தேவி கன்ய யோஜனா
உத்தரகாண்ட் மாநிலத்துக்கான பிரத்யேக திட்டம் இதுவாகும். இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கணக்கு தொடங்கி ரூ.1500 டெபாசிட் செய்யப்படும்.
5) பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ
பெண் குழந்தைகளை பாலின அடிப்படையிலான கருக்கலைப்பு, சமூகப் பிரச்சனைகள், குழந்தைக் கல்வி மற்றும் சுகாதாரப் பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றும் முதன்மை நோக்கத்துடன் நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு உதவும் அரசு திட்டங்களில் பேட்டி பச்சாவோ பேட்டி படாவோவும் ஒன்றாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/