LIC mutual fund offers double your money details here: நம்மில் பெரும்பாலானோருக்கு, நம்முடைய முதலீடு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும், அதேநேரம் குறிப்பிடத்தக்க வருவாயையும் ஈட்ட வேண்டும். அத்தகைய முதலீட்டாளர்களுக்கு இந்த தகவல் உதவலாம். வாருங்கள் ஐந்தே ஆண்டுகளில் உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்கும் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
நீங்கள் பாதுகாப்பான முதலீட்டை விரும்பினால், சொத்து மேலாண்மைத் துறையில் எல்ஐசியின் துணை நிறுவனமான எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் உங்களுக்குச் சிறந்தது. எல்ஐசியின் துணை நிறுவனமான இந்த நிறுவனம், மியூச்சுவல் ஃபண்ட் சந்தையில் பல வகையான திட்டங்களை வழங்கி வருகிறது.
இது ஈக்விட்டி மற்றும் முதலீட்டு ஃபண்ட் திட்டங்களைக் கொண்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் அதிக இரட்டை இலக்க வருமானத்தை வழங்கிய எல்ஐசி மியூச்சுவல் ஃபண்டின் வெவ்வேறு ஈக்விட்டி திட்டங்களைப் பற்றிய தகவல்களை இப்போது பார்க்கலாம். இவற்றில் CAGR வருமானம் 16.5 சதவீதம் முதல் 18.5 சதவீதம் வரை 5 ஆண்டுகளில் கொடுக்கப்பட்டுள்ளது. SIP செய்பவர்களுக்கும் இங்கு மிகப்பெரிய வருமானம் கிடைத்துள்ளது.
LIC நீண்ட கால மியூச்சுவல் ஃபண்ட் திட்டம்
எல்ஐசி நீண்ட கால மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் 5 ஆண்டுகளில் 16.3 சதவீத சிஏஜிஆர் வருமானத்தை அளித்துள்ளது. இங்கு 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தின் மதிப்பு ரூ.2.12 லட்சமாக மாறியது. 5000 மாத முதலீடு 5.10 லட்சமாக மாறியது. இந்த முதலீடு உங்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்.
LIC மியூச்சுவல் ஃபண்ட் வரித் திட்டம்
LIC MF வரித் திட்டம் 5 ஆண்டுகளில் 16.5 சதவிகித CAGR வருமானத்தை அளித்துள்ளது. இங்கு 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தின் மதிப்பு ரூ.2.14 லட்சமாக மாறியது. 5000 மாத முதலீடு 5.08 லட்சமாக மாறியது.
இதையும் படியுங்கள்: ஃபிக்ஸிட் டெபாசிட் vs ரெக்கரிங் டெபாசிட்; சிறந்தது எது?
LIC இடிஎஃப்- நிஃப்டி 50
LIC MF ETF- Nifty 50 ஆனது 5 ஆண்டுகளில் 17.66 சதவிகிதம் CAGR வருமானத்தை அளித்துள்ளது. இங்கு 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தின் மதிப்பு ரூ.2.26 லட்சமாக மாறியது. 5000 மாத முதலீடு 5.13 லட்சமாக மாறியது. இந்த முதலீடு உங்களுக்கும் சிறந்தது.
LIC நீண்டகால மற்றும் நடுத்தர கால மியூச்சுவல் ஃபண்ட்
LIC MF Large & Mid Cap Fund ஆனது 5 ஆண்டுகளில் 18.41% CAGR வருமானத்தை அளித்துள்ளது. இங்கு 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தின் மதிப்பு ரூ.2.33 லட்சமாக மாறியது. அதேசமயம் ரூ.5000 மாத முதலீடு ரூ.5.8 லட்சமாக மாறியது. அதாவது, இங்கு முதலீடு செய்யப்படும் பணம் உங்கள் வளர்ச்சி வேகத்தை இரட்டிப்பாக்கும்.
LIC MF ETF – சென்செக்ஸ்
LIC MF ETF- சென்செக்ஸ் 5 ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு 18.5 சதவீத CAGR வருமானத்தை அளித்துள்ளது. இந்த காலகட்டத்தில் 1 லட்சத்தின் மதிப்பு ரூ.2.24 லட்சமாக உயர்ந்தது. அதேசமயம் மாத முதலீடு 5000 ரூபாய் 5.17 லட்சமாக மாறியது. இந்த முதலீடு உங்களுக்கு சிறந்ததாக இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.