இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய ஜீவன் சாந்தி (திட்டம் எண். 858) திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
பொதுவாக, நிலையான மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர பணப்புழக்கத்துடன் முன்கூட்டியே ஓய்வு பெற விரும்பும் நபர்களுக்கு எல்ஐசி நியூ ஜீவன் சாந்தி ஒரு நல்ல தேர்வாகக் கருதப்படுகிறது.
எல்.ஐ.சி புதிய ஜீவன் சாந்தி திட்டம்
இந்தத் திட்டத்தில் அதிகபட்ச கொள்முதல் விலை வரம்பு இல்லாததால், அதிக கொள்முதல் விலை அதிக வருடாந்திரத்திற்கு வழிவகுக்கிறது.
எல்ஐசி அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒரு கால்குலேட்டரையும் வழங்குகிறது. இந்தக் கால்குலேட்டரைப் பயன்படுத்தி மாத ஓய்வூதியம் ரூ.1 லட்சத்து 50,000க்கு எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம்.
ரூ.1 லட்சம் மாத ஓய்வூதியம்
அந்த வகையில், ஒற்றை வாழ்க்கைக்கான (சிங்கிள் லைஃப்) விஷயத்தில், 1 கோடி ரூபாய் பாலிசி எடுத்தால், காத்திருப்பு காலம் 12 ஆண்டுகள் ஆகும்போது, மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.1.06 லட்சம் வழங்கப்படும் என்று கால்குலேட்டர் காட்டுகிறது.
ஒருவேளை காத்திருப்பு காலம் 10 ஆண்டுகளாக இருந்தால், மாதாந்திர ஓய்வூதியம் ரூ.94,840 ஆக குறைகிறது.
ரூ.50 ஆயிரம் மாத ஓய்வூதியம்
ரூ.50 லட்சம் ரூபாய் வாங்கினால், காத்திருப்பு காலம் 12 ஆண்டுகள் ஆகும்போது, மாதாந்திர ஓய்வூதியமாக ரூபாய் 53,460 வழங்கப்படும்.
காத்திருப்பு காலம் 10 ஆண்டுகளாக இருந்தால், மாதாந்திர ஓய்வூதியம் ரூ.47,420 ஆக குறைகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/