இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) புதிய பென்ஷன் பிளஸ் தனிநபர் ஓய்வூதியத் திட்டம் ஆகும். இந்தத் திட்டம் ஒழுங்குபடுத்தப்பட்ட சேமிப்புகள் மூலம் தனிநபர் ஒரு கார்பஸை உருவாக்க உதவுகிறது.
அந்த வகையில், பிரீமியம் செலுத்தும் ஆண்டுகளில் திரட்டப்பட்ட நிதியை வழக்கமான வருமானமாக மாற்றலாம். வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தை ஒற்றை பிரீமியம் அல்லது வழக்கமான பிரிமீயத்தில் இணையலாம்.
மேலும் இந்தத் திட்டத்தில் நான்கு முதலீட்டு விருப்பங்கள் உள்ளன. அவை, ஓய்வூதிய வளர்ச்சி நிதி, ஓய்வூதியப் பத்திர நிதி, ஓய்வூதியப் பாதுகாக்கப்பட்ட நிதி மற்றும் ஓய்வூதிய சமநிலை நிதி ஆகும்.
புதிய பென்ஷன் பிளஸ் திட்டத்தின் கீழ் ஒருமுறை பிரீமியம் செலுத்துவதற்கு குறைந்தபட்சத் தொகை ரூ.1 லட்சம் ஆகும். வழக்கமான பிரீமியத்தைப் பொறுத்தவரை, குறைந்தபட்ச மாதாந்திர பங்களிப்பு ரூ. 3000 ஆகவும், குறைந்தபட்ச வருடாந்திர பிரீமியம் ரூ. 30,000 ஆகவும் இருக்கும். அதிகபட்ச வரம்பு இல்லை.
வயது வரம்பு
இந்தத் திட்டத்தில் இணைய குறைந்தப்பட்ச வயது வரம்பு 25 ஆகவும், அதிகப்பட்ச வயது வரம்பு 75 ஆகவும் உள்ளது. அதேபோல், குறைந்தபட்ச பாலிசி காலம் 10 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 42 ஆண்டுகள் ஆகும்.
இதேபோல், மாதாந்திர பங்களிப்பு ரூ. 5,000க்கு, 15 ஆண்டுகளுக்குப் பிறகு, நிதி மதிப்பு சுமார் ரூ. 14 லட்சமாக இருக்கும்.
மேலும், ஓய்வூதிய வளர்ச்சி நிதியின் கீழ் ரூ. 5000 மாதாந்திர பிரீமியத்தின் நிதி மதிப்பு 20 ஆண்டுகளில் சுமார் ரூ. 23 லட்சமாக இருக்கும் என்று காட்டுகிறது.
இதுவே 4% வருமானமாக இருந்தால், நிதி மதிப்பு தோராயமாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.15 லட்சமாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“