இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்ஐசி), பாலிசி காலாவதியான பாலிசிதாரர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.
புதிய திட்டத்தின்படி, ஒருவர் தாமதமான கட்டணத்தைச் செலுத்துவதன் மூலம் காலாவதியான பாலிசியை மீண்டும் புதுப்பிக்க முடியும். அவ்வாறு காலாவதியான பாலிசியின் பிரீமியத்தை டெபாசிட் செய்ய 2022 மார்ச் 25 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பிரீமியம் செலுத்த வேண்டிய தேதி 5 ஆண்டுகளுக்கு மேல் இருக்கக்கூடாது. தகுதியான உடல்நலம் மற்றும் மைக்ரோ-இன்சூரன்ஸ் திட்டங்களும் தாமதக் கட்டணத்தில் சலுகையைப் பெற தகுதியுடையவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், ரூ.1 லட்சம் பிரீமியம் உள்ள பாரம்பரிய மற்றும் உடல்நலக் காப்பீட்டின் தாமதக் கட்டணத்தில் 20 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2,000 தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இதுதவிர, ரூ.3 லட்சத்துக்கும் மேலான பிரீமியம் கொண்ட பாலிசியின் தாமதக் கட்டணத்தில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3000 தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பல ஊடக அறிக்கைகளின்படி, காப்பீட்டாளர் தனது IPO-ஐ மார்ச் 2022 க்கு பதிலாக ஏப்ரல் 2022 இல் தொடங்குவார் என தெரிகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil