இந்திய ஆயுள் காப்பீடு நிறுவனத்தின் (எல்.ஐ.சி) வங்கதேச அலுவலகம் ஆக.7ஆம் தேதிவரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் உள்ள எல்.ஐ.சி அலுவலகம் ஆகஸ்ட் 7 வரை மூடப்படும் என பொதுத்துறை எல்ஐசி திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும், அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கும் இடையே கடந்த இரண்டு நாட்களில் நடந்த கடும் மோதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக டாக்காவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், "வங்காளதேசத்தில் நிலவும் சமூக-அரசியல் சூழ்நிலை காரணமாக, ஆகஸ்ட் 05, 2024 முதல் ஆகஸ்ட் 07, 2024 வரையிலான காலக்கட்டத்தில் வங்கதேசத்தின் எல்.ஐ.சி. அலுவலகம் மூடப்பட்டிருக்கும்” என அறிக்கை வாயிலாக எல்.ஐ.சி கூறியுள்ளது.
மேலும், “வங்காளதேசத்தில், அரசு ஆகஸ்ட் 05, 2024 முதல் ஆகஸ்ட் 07, 2024 வரை 3 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது” என்று எல்ஐசி தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் நேற்று, எல்.ஐ.சி.யின் பங்குகள் பிஎஸ்இயில் முந்தைய முடிவில் இருந்ததை விட 6.10 சதவீதம் குறைந்து ரூ.1,110-ல் முடிவடைந்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“