/tamil-ie/media/media_files/uploads/2020/12/maxresdefault-2.jpg)
lic online lic apply online lic
lic online lic apply online lic : எல்.ஐ.சி-யின் 63 வருட அனுபவத்தில், எல்.ஐ.சி. ஜீவன் உமாங் போன்று இப்படி ஒரு பாலிசியை அறிமுகப்படுத்தியதே இல்லை என பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.
நமது குழந்தைகளுக்காக, நம்மையே தியாகம் செய்யும் நாம், நமது எதிர்கால தேவைகளையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். மேலும், தன்னையே அர்ப்பணித்து, ஒரு தியாக தீபமாக வாழ்ந்து கொண்டிருக்கும், தனது அன்பு மனைவியின் வாழ்வும், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலமும், வளமாக நலமாக, இருக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு குடும்பத்தலைவனின் லட்சிய கனவாக இருக்கும். அந்த இலட்சிய கனவை நினைவாக்குவதே எல்.ஐ.சி.யின் ஜீவன் உமங் பாலிசியின் திட்டமாகும். இந்த பாலிசியின் முதிர்வு வயது 100 என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் முதிர்வு வயது 85 என எடுத்துக் கொண்டால் கூட, பாலிசிதாரருக்கு 85 வயது வரை பென்ஷன் கிடைக்கும். ஒரு ஆண்டு பென்ஷன் ரூ.1,00,000 வீதம், 48 ஆண்டுகளுக்கு என மொத்தம் ரூ. 48,00,000 கிடைக்கும் . விபத்தினால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் ரூ.25 லட்சம் மற்றும் 3 வகையான போனஸ் கிடைக்கும்.
சில தவிர்க்க முடியாத,நல்ல காரியங்களினால் பிரிமியம் செலுத்துவது தடைபட்டாலும், இந்த பாலிசியின் பிரிமியம் செலுத்தும் காலத்தை குறைத்து கொள்ளலாம். உதாரணமாக 10 ஆண்டுகளாக, 5 ஆண்டுகளாக ,குறைந்தது குறைத்துக் கொள்ள முடியும். ஆனால் நாம் செலுத்தியிருக்கும் பிரிமியத்திற்கு ஏற்ப பயன்கள் மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறிப்பாக இந்த திட்டத்தில் ஒருவர் தினமும் 199 ரூபாய் முதலீடு செய்தால் அவர் நிச்சயமாக 94 லட்சம் ரூபாய் பெறமுடியும். இதற்கான வழிவகையும் இந்த திட்டத்தில் உள்ளது என எல்ஐசி தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.