எல்ஐசியின் புதிய ஜீவன் சாந்தி (திட்டம் எண் 858) என்பது வருடாந்திரத் திட்டமாகும். இதை மொத்தத் தொகையைச் செலுத்தி வாங்கலாம்.
இது இணைக்கப்படாத, பங்கேற்காத, ஒற்றை பிரீமியம் திட்டமாகும். மேலும், இந்தத் திட்டம் பாலிசியின் தொடக்கத்தில் உத்தரவாதமான வருடாந்திர விகிதங்களை வழங்குகிறது.
இந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்ட, உடனடி வருடாந்திரங்களை வாங்குவதற்கான விருப்பத்தை வழங்குகிறது.
யாரெல்லாம் வாங்கிக் கொள்ளலாம்?
எல்ஐசியின் புதிய ஜீவன் சாந்தி திட்டத்தை 30 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் வாங்கலாம். ஒத்திவைக்கப்பட்ட வருடாந்திர நுழைவுக்கான அதிகபட்ச வயது 79 ஆண்டுகள் ஆகும்.
மேலும், இந்த பாலிசிக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை ரூ. 1.5 லட்சம் ஆகும்.
ரூ.10 லட்சம் ரிட்டன் பெறுவது எப்படி?
இந்த புதிய ஜீவன் திட்டத்தில் 30 வயதில் வாங்கப்பட்ட ரூ.10 லட்சம் பாலிசியில் ரூ.86 ஆயிரத்து 784 வரை ஆண்டு ஓய்வூதியம் பெறலாம்.
அதே நேரத்தில் 12 ஆண்டுகள் திட்டத்தில் ரூ.132920 வரை ஆண்டு ஓய்வூதியம் பெறலாம்.
தொடர்ந்து, 45 வயதில் ரூ.10 லட்சத்தில் பாலிசியை வாங்கி 5 ஆண்டுகள் ஒத்திவைத்தால், ஆண்டு ஓய்வூதியம் ரூ.90,456 ஆக இருக்கும்.
45 வயதில் 12 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்டால், ஆண்டு ஓய்வூதியம் ரூ.1,42,508 ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“