LIC plan For Rs 15 lakh Rs 9250 per month pension : PMVVY திட்டம் என்பது ப்ரதான் மந்திரி வய வதனா யோஜானா என்ற மூத்த குடிமக்களுக்கான திட்டமாகும். அல்லது 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆன்லைன் மூலமாக எல்.ஐ.சியி. இந்த திட்டத்தில் இணையலாம். ஒரு குறிப்பிட்ட தொகையை ஆன்லைனில் செலுத்தி நீங்கள் இந்த ஓய்வூதிய திட்டத்தில் இணையலாம். அடுத்த 10 ஆண்டுகளுக்கு பென்ஷன் பணத்தை தருவதோடு, நீங்கள் முதலீடாக செலுத்த பணத்தை பத்து ஆண்டுகள் கழித்து திருப்பியும் செலுத்துகிறது. ஒரு மூத்த குடிமகன் இந்த வய வதன யோஜனா திட்டத்தில் ரூ. 15 லட்சம் செலுத்தி இணைகிறார் என்றால் அவருக்கு 10 வருடத்திற்கு மாதம் ரூ. 9250 என்று பென்சன் தொகை கிடைக்கும்.
ஓய்வூதிய தொகையை பெறும் முறை
நீங்கள் இந்த ஓய்வூதியத்தை மாதம், காலாண்டு மற்றும் ஆண்டு என்ற கால இடைவெளியில் பெற்றுக் கொள்ளலாம். இந்த முறையில் ஓய்வூதியத்தை பெற பயனர் விரும்புகிறாரோ அவ்வ்வாறே அவர் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி எது?
மூத்த குடிமக்கள் பி.எம்.வி.வி.வி. திட்டத்தின் கீழ் மார்ச் 31, 2023க்குள் தங்களை இணைத்துக் கொள்ளலாம். இந்திய குடிமக்களுக்கு மட்டுமே இந்த திட்டத்தில் இணைய முடியும்.
மருத்துவ சோதனை
இந்த திட்டத்தில் சேர விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு மருத்துவ சோதனை ஏதும் செய்ய வேண்டிய தேவை இல்லை
கடன் பெறும் வசதி
இந்த திட்டத்தின் கீழ், மூன்று வருட காலத்திற்கு பிறகு திட்டத்தில் இணைய செய்யப்பட்ட முதலீட்டில் 75% வரை கடனாக பெற முடியும்
குறைந்த பட்ச அதிக பட்ச முதலீட்டு வரம்பு
இந்த மாதாந்திர ஓய்வூதிய திட்டத்தில் இணைய குறைந்தபட்சமாக 1,62,162 ரூபாயை முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் மாத ஓய்வூதியம் ரூ. 1000 வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் செலுத்தலாம். அதன் மூலம் ரூ. 9250-ஐ மாத ஓய்வூதியமாக அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவர்கள் பெற முடியும். மேலும் 10 ஆண்டுகள் கழித்து முழுமையான முதலீட்டு தொகையை திரும்பி பெற்றுக் கொள்ளலாம். எல்.ஐ.சி. இணையத்தில் இந்த திட்டத்தில் நீங்கள் இணைந்து கொள்ளலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil