இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி (LIC) மத்திய அரசின் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், எல்ஐசி நிறுவனம் தனது வாடிக்கையாளர் அல்லது பாலிசிதாரர்கள் இலவசமாகவே கிரெடிட் கார்டு பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
இதற்காக ஐடிபிஐ வங்கியுடன் எல்ஐசி நிறுவனம் கூட்டணி அமைத்து அண்மையில் ரூபே கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
லூமின் (Lumine), எக்லாட் (Eclat) ஆகியவை தான் கிரெடிட் கார்டுகளின் பெயர்கள் ஆகும். இவை எல்ஐசி பாலிசிதாரர்களுக்கும், உறுப்பினர்களுக்கும், ஏஜெண்டுகளுக்கும் பிரத்யேகமாக வழங்கப்படுகிறது. இந்த கிரெட்டிட் கார்ட் அனைத்து பொதுமக்களும் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் இருப்பதாக கூறப்படுகிறது.
எல்ஐசி கிரெடிட் கார்டு சிறப்பு அம்சங்கள்
இதனை பயன்படுத்தி பாலிசிதாரர்கள் பிரீமியம் செலுத்தினால் டபுள் பரிசுப் புள்ளிகள் (Reward points) கிடைக்கும்.
பெட்ரோல் டீசல் கட்டணத்துக்கு கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன
இந்த இரண்டு கிரெடிட் கார்டுகளும் எல்ஐசி மற்றும் ஐடிபிஐ வங்கியால் கூட்டாக வழங்கப்பட்டன. எல்ஐசி சிஎஸ்எல் லுமின் பிளாட்டினம் கிரெடிட் கார்டு முதலாவதும், எல்ஐசி சிஎஸ்எல் எக்லாட் செலக்ட் கிரெடிட் கார்டு இரண்டாவதும் ஆகும்.
எல்ஐசியின் லூமின் , எக்லாட் கிரெடிட் கார்டுகளின் நன்மைகள்
- லூமின் மற்றும் எக்லாட் கார்டுகள் தாராளமான கடன் வரம்புடன் வருகின்றன.
- லூமின் கிரெடிட் கார்டு மூலம் 100 ரூபாய் செலவு செய்தால் 3 டிலைட் பாயிண்ட்ஸ் (Delight points) கிடைக்கும்.
- எக்லாட் கார்டு மூலம் 100 ரூபாய் செலவு செய்தால் 4 டிலைட் பாயிண்ட்ஸ் கிடைக்கும்
- கிரெடிட் கார்டு மூலம் எல்ஐசி பிரீமியம் செலுத்தினால் மேற்கூறிய டிலைட் பாயிண்ட்ஸ் இருமடங்காக கிடைக்கும். அதாவது, செலவழித்த ஒவ்வொரு ரூ.100க்கும், நீங்கள் ஆறு முதல் எட்டு வெகுமதி புள்ளிகளைப் பெறுவீர்கள்.
- எக்லாட் கிரெடிட் கார்டு வைத்திருப்போர் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையங்களில் Lounge ஐ இலசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
- இந்தக் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ. 400 அல்லது அதற்கு மேல் பரிவர்த்தனை செய்தால், 1% எரிபொருள் கூடுதல் கட்டணம் திரும்பப் பெறுவீர்கள்.
- ரூ3000க்கு மேல் மதிப்பிலான பொருளை வாங்கினால், அதை எளிய தவணைகளாக (EMI) எளிதாக மாற்றலாம்.
- 3, 6, 9, 12 மாதங்கள் என உங்கள் தேவைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப EMI ஆக மாற்றிக்கொள்ளலாம்.
- எல்ஐசி கிரெடிட் கார்டுகள் விபத்துக் காப்பீடு பலன்களுடன் வருகின்றன.
- புதிதாக கார்டு வாங்கிபோவருக்கு Welcome Bonus வழங்கப்படும். அதாவது கார்டு வாங்கி 60 நாட்களுக்குள் 10,000 ரூபாய் செலவு செய்தால் 1000 அல்லது 1500 Welcome Bonus புள்ளிகள் கிடைக்கும். அதனை ஆடைகள் போன்ற லைப்ஸ்டைல் பொருள்கள் வாங்கிட உபயோகிக்கலாம்.
- எல்ஐசி கிரெடிட் கார்டுக்கு மெம்பர்ஷிப் கட்டணம் அல்லது ஆண்டுக் கட்டணம் கிடையாது
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil