பண தேவையா? எல்.ஐ.சி யில் கடன் பெறலாம்! எப்படி தெரியுமா?

தற்போது வரை செயல்பாட்டில் உள்ளதா என்பதை முன்பே முகவரிடம் விசாரித்துக் கொள்ளுங்கள்.

loan

lic policy lic online lic amount lic : மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி-யிடம் (Life Insurance Corporation) காப்பீட்டு வாங்கியிருந்தால், நீங்கள் பிரீமியம் தொகைக்கு பதிலாக கடன் பெறலாம். உங்கள் தேவைகளுக்கு ஈடாக எல்.ஐ.சி யிலிருந்து தனிப்பட்ட கடன் பெறலாம்.

எல்.ஐ.சியின் (LIC Policy) புதிய கொள்கை காரணமாக, நீங்கள் கடன் வாங்க எங்கும் செல்ல வேண்டியதில்லை, மாறாக வீட்டில் இருந்தபடியே நிறுவனம் உங்களுக்கு கடன் வழங்கும். இதில் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், இந்த கடனை நீங்கள் திருப்பிச் செலுத்தத் தேவையில்லை.

பாலிசி (LIC Policy Loan) முதிர்ச்சியடைந்த பிறகு, நிறுவனம் கடனுக்கான தொகையை கழித்துவிட்டு, மீதமுள்ள பணத்தை உங்களுக்கு திருப்பி அளிக்கும். அதாவது, நீங்கள் அதன் வட்டியை மட்டுமே திருப்பிச் செலுத்த வேண்டும், மேலும் பாலிசியில் உறுதிப்படுத்தப்பட்ட தொகையில் இருந்து, உங்கள் கடன் தொகையை நிறுவனம் கழித்துக்கொள்ளும்.

எல்.ஐ.சி (LIC) நிறுவனத்தில் கடன் வாங்க இந்திய குடிமகனாக இருப்பது அவசியம். இது தவிர, நீங்கள் எல்.ஐ.சி பாலிசியை வாங்கி இருக்க வேண்டும். கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்த வேண்டும். உங்கள் வயது 18 வயதுக்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும். பாலிசியின் உறுதிப்படுத்தப்பட்ட மதிப்பில் அதிகபட்சம் 90 சதவீதம் வரை நீங்கள் கடன் பெறலாம். ஆனால் இந்த திட்டமானது நிபந்தனைகளுக்கு உட்பட்டது. கொரோனா காலத்தில் வெளியான இந்த அறிவிப்பு தற்போது வரை செயல்பாட்டில் உள்ளதா என்பதை முன்பே முகவரிடம் விசாரித்துக் கொள்ளுங்கள்.

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Lic policy lic online lic amount lic pay lic account online lic

Next Story
எஸ்பிஐ ஏடிஎம் கார்டு.. இனி பணம் எடுக்க அதுகூட தேவையில்லை மக்களே!sbi sbi bank sbi sbi state bank sbi state bank
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com