Advertisment

எல்.ஐ.சி.யில் பாலிசி வேண்டுமா? ஆன்லைனில் மிகச் சுலபம்

இசேவைகளை பயன்படுத்திக் கொள்ள அங்கு கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து உங்கள் பாலிசியை பதிவு செய்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
LIC Policy Online Registration, LIC Policies, Today News, Tamil News,

LIC Policy Online Registration, LIC Policies, Today News, Tamil News,

உங்களுக்கு புதிய இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன (எல்ஐசி) பாலிசி எடுக்க, அல்லது பழைய பாலிசியை புதுப்பிக்க (renew) அல்லது மேம்படுத்த (update) என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லையா. கவலையை விடுங்கள் எங்களிடம் இதற்கான பதில் உள்ளது. எந்த வித தொந்தரவும் இல்லாமல் இதை நீங்கள் செய்யலாம் அதற்கு நீங்கள் உங்களை ஆன்லைனில் பதிவு செய்துக் கொண்டால் மட்டும் போதும்.  எல் ஐ சி இணையதளத்தில் உங்களை பதிவு செய்து கொள்ள கீழ் குறிப்பிட்டுள்ளவைகளை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

Advertisment

மேலும் படிக்க : தனி நபர் கடன்கள் : உங்களின் தேவைகளை அதிகம் புரிந்து கொண்ட வங்கி எது?

உங்களுடைய எல் ஐ சி பாலிசி எண்

உங்கள் பான் அட்டை அல்லது கடவு சீட்டை ஸ்கேன் (scan) செய்து 100kb குறைவான அளவுடைய பைலாக வைத்துக் கொள்ளுங்கள். ஸ்கேன் செய்த படம் .jpg அல்லது .jpeg வடிவத்தில் இருக்க வேண்டும். .bmp, .png, gif, .tiff போன்ற வடிவத்தில் உள்ள படங்களையும் பதிவேற்றம் செய்யலாம்.

பாலிசியின் தவனை தொகை

www.licindia.in என்ற இணையதள முகவரிக்கு சென்று “Customer Portal” என்பதை சொடுக்கவும்.

ஏற்கனவே நீங்கள் Customer Portal ல் பதிவு செய்யவில்லை என்றால் “New user” என்பதை சொடுக்கவும்.

அதில் கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் உள்ளீடு செய்து யூசர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை தேர்வு செய்து கொள்ளவும்.

இப்போது நீங்கள் ஒரு பதிவு செய்யப்பட்ட பயனர். e-சேவைகளை பயன்படுத்தி கொள்ள e-Services என்பதை சொடுக்கி யுசர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உள் நுழையவும். இசேவைகளை பயன்படுத்திக் கொள்ள அங்கு கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து உங்கள் பாலிசியை பதிவு செய்துக் கொள்ளுங்கள்.

அந்த படிவத்தை ஒரு பிரிண்ட் எடுத்து கையெழுத்திட்டு அதை ஸ்கேன் செய்து மீண்டும் பதிவேற்றுங்கள். அத்துடன் ஸ்கேன் செய்த பான் அட்டை, ஆதார் அட்டை அல்லது கடவுச் சீட்டையும் பதிவேற்றுங்கள். அவற்றை சரிப்பார்த்த பிறகு உங்களுக்கு ஒரு ஒப்புகை மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வரும். இப்போது நீங்கள் எல் ஐ சி யின் இ சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment