ஒரு நாளைக்கு ரூ.9 முதலீடு செய்தால் போதும்… எல்.ஐ.சி புதிய பாலிசி!

இந்த பாலிசியை வாங்க விரும்பும் நபர்கள் ஆன்லைன் மூலமாகவோ, ஆஃப்லைன் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம்.

LIC Policy Plan 2019 Invest Rs 9 every day, New Jeevan Anand Policy, LIC
LIC Policy Plan 2019 Invest Rs 9 every day

LIC Policy Plan 2019 Invest Rs 9 every day and get Rs 4.56 lakh :  இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் எல்.ஐ.சி ஆகும். வாடிக்கையாளர்களின் தேவை கருதி அதற்கு ஏற்ற வடிவில் திட்டங்களை தயாரித்து தருவதில் எல்.ஐ.சிக்கு நிகர் எல்.ஐ.சி மட்டும் தான். மிக மிக குறைவான முதலீட்டில் லாபம் ஈட்ட உதவும் பாலிசிகளில் ஒன்று தான் புதிய ஜீவன் ஆனந்த் பாலிசி 815 ஆகும்.

திமுக கூட்டணி சார்பில் CAAவை எதிர்த்து பேரணி…

இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் பட்டியல் வெளியீடு!

ஜீவன் ஆனந்த் பாலிசியின் சிறப்பம்சங்கள்

இந்த திட்டத்தின் மிகமுக்கியமான அம்சமே இந்த பாலிசி ஹோல்டர் இந்த திட்டத்திற்காக வரி ஏதும் செலுத்த வேண்டியது இல்லை. பாலிசி முடிந்த பின்பும் கூட ரிஸ்க் கவர் செய்து கொள்ள முடியும். இந்த திட்டத்தின் பாலிசி ஹோல்டர் இறந்துவிட்டால் அவர் நாமினேட் செய்த வாரிசுகள் இந்த பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்.  இந்த பாலிசியை வாங்க குறைந்த வயது 8 ஆகும். அதிக வயது 50 ஆகும். இந்த பாலிசி நிறைவடைய 15 முதல் 35 ஆண்டுகள் வரை ஆகும். இந்த பாலிசியை வாங்க விரும்பும் நபர்கள் ஆன்லைன் மூலமாகவோ, ஆஃப்லைன் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம்.

இதற்கு எப்படி ப்ரீமியம் செலுத்த வேண்டும்?

இந்த பாலிசிக்கான ப்ரீமியத்தை வாடிக்கையாளர்கள் வருடாந்திர தவணையாகவும், அரையாண்டுக்கு ஒருமுறையும், காலாண்டுக்கு ஒரு முறையும், விரும்பினால் மாதத்திற்கு ஒரு முறையும் கட்டிக் கொள்ளல்லாம். இந்த பாலிசியின் குறைந்த பட்ச சம் என்பது 1 லட்சம் ஆகும். மேக்ஸிமம் லிமிட் என எதுவும் இல்லை. இந்த திட்டம் வருமான வரி சட்டம் பிரிவு 80சியின் கீழ் வருவதால் வரி விலக்கு இதற்கு அளிக்கப்படும்.

மேலும் படிக்க : உஷாரய்யா உஷாரு! வாடிக்கையாளர்களை எச்சரிக்கை செய்யும் எஸ்.பி.ஐ

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Lic policy plan 2019 invest rs 9 every day and get rs 4 56 lakh lic new jeevan anand policy

Next Story
பொது இடங்களில் மொபைல் சார்ஜ் பண்ணுபவரா நீங்க? வீடியோ போட்டு எச்சரிக்கும் எஸ்பிஐ வங்கிSBI released video regarding charging phone at public stations - பொது இடங்களில் மொபைல் சார்ஜ் பண்ணுபவரா நீங்க? வீடியோ போட்டு எச்சரிக்கும் எஸ்பிஐ வங்கி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express