Advertisment

இவ்வளவு முதலீடு செய்தால் மாதம் ரூ9250 வருமானம்: LIC-யின் இந்த ஸ்கீம் செம சூப்பர்ல!

Business News in Tamil : எல்.ஐ.சி-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான Licindia.in வழியாக ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சொந்த வீடு வாங்கணுமா? எல்ஐசி வட்டி விகிதம் இதுதான்!

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்.ஐ.சி மூத்த குடிமக்களுக்காக வழங்கி வந்த, ‘பிரதான் மந்திர வயா வந்தனா யோஜனா’ என்ற திட்டத்தில் மாறுதல்களை கொண்டு வந்துள்ளது. எல்.ஐ.சி.யின் இந்த மாற்றத்திற்கு பிறகு, முன்பை விட கூடுதலாக 7.4% எனும் வீதத்தில் உறுதியான வருமானத்தை திட்டத்தின் முதிர்வுக் காலம் வரை லாபம் ஈட்ட வழிவகை செய்கிறது. இந்த திட்டமானது, கடந்த வருடம் ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்டது. மேலும், வருகின்ற 2023-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை, அதாவது, மூன்று நிதியாண்டுகளுக்குள் மூத்த குடிமக்கள் முதலீடு செய்ய காலம் வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த திட்டம் குறித்து அறிந்து கொள்ளவும், பயன்பெறவும் முக்கியமான தகவல்களை உங்களுக்காக தொகுத்து வழங்கி உள்ளோம்.

publive-image

இந்த திட்டத்தில் முதலீடு செய்வது எப்படி?

எல்.ஐ.சி.யால் வழங்கப்படும் இந்த திட்டமானது, 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் எல்.ஐ.சி-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான Licindia.in வழியாக ஆன்லைனில் பதிவு செய்யலாம். மேலும், அருகிலுள்ள எல்.ஐ.சி அலுவலகத்திற்கு சென்றும் பதிவு செய்துக் கொள்ளலாம்.

ஓய்வூதியம் எவ்வாறு வழங்கப்படுகிறது?

எல்.ஐ.சி.யின், பிரதான் மந்திர வயா வந்தனா யோஜனா திட்டமானது, முதலீடு செய்யும் மூத்த குடிமக்களிடம் 10 ஆண்டுகளில் குறிப்பிட்ட விகிதத்தில் சீரான ஓய்வூதியத்தை வழங்கி வருகிறது. மேலும், இத்திட்டத்தில் இணைந்து, ஓரிரு ஆண்டுகளில் ஓய்வூதியதாரர்
உயிரிழக்கும் வேளையிலும், திட்டத்திற்கான நன்மைகளையும் சேர்த்து வழங்குகிறது.

ஓய்வூதியதாரர் பாலிசியின் முழுமையான காலமான 10 ஆண்டுகள் வரை வாழ்ந்தால், அவரின் முதலீட்டு தொகை மற்றும் இறுதி ஓய்வூதிய தவணை ஆகிய இரண்டையும் சேர்த்து பெறுவார். இருப்பினும், பாலிசி முழுமைப் பெறாத காலத்தில் ஓய்வூதியதாரர் உயிரிழக்க நேரிட்டால், அவரின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு முதலீட்டுத் தொகை திருப்பி செலுத்தப்படும்.

ஓய்வூதியம் அளிக்கப்படும் முறை :

பாலிசிதாரர்களுக்கு ஓய்வூதியமானது, மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என பல்வேறு காலங்களில் வழங்கப்படுகிறது. ஓய்வூதிய கட்டணம் NEFT அல்லது ஆதார் எண் மூலம் இயக்கப்பட்ட கட்டண முறை ஆகியவற்றின் மூலம் வழங்கப்படுகிறது. எனவே, ஓய்வூதியம் செலுத்தும் முறையைப் பொறுத்து, அதாவது, மாதாந்திர, காலாண்டு, அரை ஆண்டு அல்லது ஆண்டு, ஓய்வூதியத்தின் முதல் தவணை ஒரு மாதம், மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் அல்லது வாங்கிய நாளிலிருந்து ஒரு வருடம் கழித்து வழங்கப்படும்.

திட்டத்தின் பிற அம்சங்கள் :

இத்திட்டத்தில் பயனடைய மருத்துவப் பரிசோதனைகள் தேவையில்லை. பாலிசிதாரர் அல்லது அவரது துணையின் மோசமான நோய் போன்ற விதிவிலக்கான சூழ்நிலைகளில் பாலிசி காலத்திற்க்கு முன்கூட்டியே வெளியேற அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், பாலிசி ஆண்டுகளான மூன்றாண்டுகள் முடிந்த பின், பாலிசி மீதான கடன் தொகை வழங்கப்படுகிறது.

உதாரணமாக இந்த பாலிசி திட்டத்தில் மாதாந்திர முதலீட்டுத் தொகையாக நீங்கள் மாதம் ஒன்றரை லட்சம் செலுத்துகிறீர்கள் எனில், ஓய்வூதியத் தொகையாக பாலிசி காலமான 10 ஆண்டுகளுக்கு மாதந்திர ஓய்வூதியத் தொகையாக 9,250 ரூபாயை நீங்கள் பெறுவீர்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lic Lic Scheme National Pension Scheme
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment