/tamil-ie/media/media_files/uploads/2022/12/small-cap-senior-citizen-savings-scheme.webp)
பேங்க் ஆஃப் இந்தியா 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பிற டெபாசிட்களுக்கும் வர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்கி வருகிறது.
LIC Pradhan Mantri Vandana Vyay Yojana: இந்திய லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், சாமானியர்களின் தேடலைக் கருத்தில் கொண்டு பல்வேறு விதமான பாலிசிகளை வழங்குகிறது.
சில பாலிசிகள் முதிர்வுக்குப் பிறகு மொத்த தொகையை வழங்குகின்றன. மேலும் சில மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர ஓய்வூதியத்தை வழங்குகின்றன.
எல்ஐசியின் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) என்பது குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஓய்வூதியம் வழங்கும் திட்டமாகும்.
இந்தத் திட்டத்தை இந்திய அரசாங்கம் 2017 இல் அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு உத்தரவாதமான ஓய்வூதியத்தை வழங்குகிறது.
கடைசி நாள்
இந்த திட்டத்தின் கடைசி நாள் மார்ச் 31, 2023 ஆகும். திட்டத்தில் ரூ.1000 முதலீடு செய்து கூட இணைந்துக் கொள்ளலாம். முதியவர்கள் PMVVY திட்டத்தில் மொத்தப் பணத்தை முதலீடு செய்து பத்து ஆண்டுகளுக்கு உத்தரவாதமான வருமானத்தைப் பெறலாம்.
ஓய்வூதிய விகிதங்கள் ஆண்டுக்கு 7.40 சதவீதம் முதல் 7.66 சதவீதம் வரை இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.