Advertisment

நாளொன்றுக்கு ரூ.71 முதலீடு.. 48 லட்சம் ரிட்டன்.. இந்த எல்.ஐ.சி., பாலிசி தெரியுமா?

இந்த திட்டத்தில் 18, 55 வயது வரையுள்ள நபர்கள் முதலீடு செய்யலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
LIC Premium Endowment Plan heres how

சிறிய முதலீடு செய்து பெரிய லாபம் பெற விரும்புபவர்கள் இந்த திட்டத்திற்கு செல்லலாம்.

இந்திய மக்கள் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தை முழுமையாக நம்புகிறார்கள். இந்தியாவில் காப்பீட்டைப் பொறுத்தவரை, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் சந்தையில் முன்னணியில் உள்ளது.

எந்த ஒரு தனியார் நிறுவனமும் எல்ஐசியின் சந்தைப் பங்கை நெருங்கவில்லை. அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் இதுவும் ஒன்று. எல்ஐசி தனது புதிய பிரீமியம் எண்டோவ்மென்ட் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது,

Advertisment

இதில் நீங்கள் மாதத்திற்கு ரூ.2,100 முதலீடு செய்து முதிர்வு காலத்தில் ரூ.48 லட்சத்தைப் பெறலாம். இது வழக்கமான வருவாயையும், முதிர்வின் போது மொத்தத் தொகையையும் வழங்குகிறது.

சிறிய முதலீடு செய்து பெரிய லாபம் பெற விரும்புபவர்கள் இந்த திட்டத்திற்கு செல்லலாம். முதலீட்டாளர்களுக்கு வரிச் சலுகைகள், காப்பீட்டுத் தொகை மற்றும் அதிக வருமானம் கிடைக்கும்.

இந்தத் திட்டத்தில் யார் முதலீடு செய்யலாம்?

இந்த திட்டத்தை 18 மற்றும் 55 வயது முதல் வாங்கலாம். இந்த பாலிசிக்கான கால அளவு 12 முதல் 35 ஆண்டுகள் ஆகும். குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ 1 ஆனால் அதிகபட்ச வரம்பு இல்லை.

ஒரு நாளைக்கு 70 ரூபாய் முதலீடு செய்து 48 லட்சம் சம்பாதிக்கலாம் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

இதற்காக, ஒருவர் 18 வயதில் 35 ஆண்டு கால திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். ரூ.10 லட்சம் காப்பீட்டுத் தொகையைப் பெற, நீங்கள் ரூ.26,534 வருடாந்திர பிரீமியமாகச் செலுத்த வேண்டும். அடுத்த ஆண்டு பிரீமியம் வெறும் ரூ.25,962 மட்டுமே.

இந்த எண்ணிக்கை படி பார்த்தால் ஒரு நாளைக்கு ரூ. 71 அல்லது மாதத்திற்கு ரூ. 2100 செலுத்த வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Lic Scheme
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment