லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (LIC) மார்ச் FY23 உடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.13,427.8 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது, இது கடந்த நிதியாண்டின் இதே காலத்தை விட 466 சதவீதம் அதிகமாகும்.
அதேநேரத்தில் மார்ச் FY22 காலாண்டில் முழுமையான நிகர லாபம் ரூ.2,371.5 கோடியாக உள்ளது. லாபத்தின் தொடர்ச்சியான வளர்ச்சி 112 சதவீதமாக காணப்படுகிறது.
இந்நிலையில், இயக்குநர்கள் குழு FY23 க்கு ஈக்விட்டி பங்கிற்கு ரூ 3 (முக மதிப்பு ரூ10) ஈவுத்தொகையை முன்மொழிந்துள்ளது. இதற்கிடையில், புதன்கிழமை பிஎஸ்இ-யில் எல்ஐசி பங்குகள் 0.61 சதவீதம் உயர்ந்து ரூ.593.55-ஆக முடிவடைந்தன.
இதன் ஒரு பங்கின் ஐபிஓ விலையான ரூ.949 இலிருந்து 37.45 சதவீத தள்ளுபடியில் மேற்கோள் காட்டுகின்றன. மார்ச் 2023 காலாண்டில் மொத்த லாபம் ரூ.36,397 கோடியாக இருந்தது, முந்தைய நிதியாண்டில் ரூ.4,043 கோடியாக காணப்பட்டது.
அதேநேரம், மார்ச் நிதியாண்டின் 23ஆம் காலாண்டில் முழுமையான நிகர பிரீமியம் வருமானம் ஆண்டுக்கு ஆண்டு 8.3 சதவீதம் குறைந்து ரூ.1.31 லட்சம் கோடியாக குறைந்துள்ளதாக எல்ஐசி தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, முதல் ஆண்டு பிரீமியம் ஆண்டுக்கு 12.33 சதவீதம் சரிந்து ரூ. 12,811.2 கோடியாக இருந்தது, ஆனால் புதுப்பித்தல் பிரீமியம் முந்தைய ஆண்டை விட 6.8 சதவீதம் அதிகரித்து ரூ.76,009 கோடியாக இருந்தது. மார்ச் FY23 காலாண்டில் LIC இன் கடன்தொகை விகிதம் 1.87 ஆக இருந்தது, இது Q4FY22 மற்றும் Q3FY23 இல் 1.85 ஆக இருந்தது.
மொத்த உபரி நிதியில், 2024 நிதியாண்டிற்கான 92.5 சதவீதத்தை (2021-22 நிதியாண்டில் 95 சதவீதம்) பங்குபெறும் பாலிசிதாரர்கள் நிதிக்கும், மீதமுள்ள 7.5 சதவீதத்தை பங்குதாரர்களின் நிதிக்கும் நிறுவனம் மாற்றியுள்ளது.
எல்ஐசியின்படி, ஆகஸ்ட் 1, 2022 முதல் ஊதியத் திருத்தம் காரணமாக ஊழியர் ஓய்வுப் பலன்களுக்காக ரூ. 11,543.75 லட்சம் கூடுதல் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“