எல்.ஐ.சி பாலிசி மூலம் நாம் பணம் சேர்த்தால், நாம் எதிர்காலத்தில் ஏற்படும் பணத் தேவைகளுக்கு உதவியாக இருக்கும். இந்நிலையில் எல்.ஐ.சி-யில் முக்கிய பாலிசியான, எல்.ஐ.சி எஸ். ஐ.ஐ.பி ( LIC SIIP) பெற நீங்கள் 18 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இந்த பாலிசியின் கால அளவு 10 முதல் 25 வருடங்கள் இருக்கிறது. இந்நிலையில் இந்த பாலிசி மூலம் முதலீடு செய்தால், வருடத்திற்கு நீங்கள் சேர்க்கும் பணித்தின் 10 மடங்கு கூடுதல் தொகை கிடைக்கும். 55 வயது-க்கும் குறைவானவர்கள் இந்த தொகை கிடைக்கும். இதுபோல நாம் சேர்க்கும் பணத்தின் 7 மடங்கு தொகையை நாம் பெற்றுக்கொள்ளலாம். இது 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பொருந்தும்.
இதற்கு நீங்கள் ப்ரீமியம் தொகை, 3 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது மாதம் மாதம் இந்த பாலிசியின் கீழ் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். ரூ. 4,000 முதல் ரூ.40,000 வரை நீங்கள் பணம் செலுத்தலாம்.
இந்த பாலிசியை நீங்கள் 5 வருடங்கள் வரை தொடர்ந்து கட்டிமுடித்து, அதன் பிறகு உங்களுக்கு முக்கிய பணத்தேவை இருக்குமாயின் குறிப்பிட்ட தொகையை வெளியே எடுக்க முடியும்.
இந்நிலையில் இந்த பாலிசி இரண்டு முக்கிய அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த பாலிசியை எடுத்தவர்கள் விபத்தில் மரணமடைந்தால் ஒரு குறிப்பிட்ட கூடுதல் தொகை அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொள்ளலாம். இதுபோலவே குறிட்ட சில வருடங்கள் கழித்து, குறிப்பிட்ட தொகையை நாம் எடுத்துக்கொள்ளலாம்.
இந்த பாலிசி 4 வகையான முதலீடு செய்யும் முறையை கொண்டுள்ளது. உதராணமாக ’Balanced Fund’ என்ற முறையில், ரூ. 50,000, தொடர்ந்து 10 வருடங்கள் முதலீடு செய்தால். ரூ. 9,39,700 வரை முழுத் தொகை நமக்கு கிடைக்கும்.