LICs Jeevan Tarun Policy: குழந்தைகளுக்கான எல்ஐசியின் ஜீவன் தருண் பாலிசி என்பது இணைக்கப்படாத, தனிநபர், ஆயுள் காப்பீட்டு திட்டமாகும். இந்தத் திட்டம் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு அம்சங்களின் கலவையாக உள்ளது.
மேலும், திட்டத்தில் 20 முதல் 24 வயது வரையிலான வருடாந்திர சர்வைவல் பெனிபிட் மற்றும் 25 வயதில் முதிர்வுப் பலன்கள் கிடைக்கின்றன.
தொடர்ந்து, வளரும் குழந்தைகளின் கல்வி மற்றும் பிற நிதித் தேவைகளை இந்தத் திட்டம் பூர்த்தி செய்வதை இந்தத் திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.
ஜீவன் தருண் பாலிசிக்கு, குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை ரூ. 75,000 ஆகும். அதிகபட்ச அடிப்படைத் தொகைக்கு வரம்பு இல்லை.
இத்திட்டத்தில் பிறந்து 90 நாள்கள் ஆன குழந்தைகள் பெயரில் முதலீடு செய்யலாம். திட்டத்தில் நுழைவதற்கான அதிகப்பட்ச வயது வரம்பு 12 ஆண்டுகள் ஆகும்.
திட்டம், 25 ஆண்டுகளில் முதிர்ச்சி பெறும். பிரிமீயம் 20 ஆண்டுகள் ஆகும்.
மேலும் இந்தப் பாலிசியில் விருப்பம் 1 இன் கீழ், உயிர்வாழும் பலன் எதுவும் இருக்காது. ஆனால் பாலிசி வைத்திருப்பவர் முதிர்வுப் பலனாக 100% உறுதியளிக்கப்பட்ட தொகையைப் பெறுவார்.
அதேபோல், விருப்பம் 2 இன் கீழ், பாலிசிதாரர் 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 5% காப்பீட்டுத் தொகையைப் பெறுவார், மேலும் உறுதியளிக்கப்பட்ட தொகையில் 75% முதிர்வு நன்மையாக வழங்கப்படும்.
விருப்பம் 3 இன் கீழ், பாலிசிதாரர் 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10% காப்பீட்டுத் தொகையைப் பெறுவார், மேலும் உறுதியளிக்கப்பட்ட தொகையில் 50% முதிர்வு நன்மையாக வழங்கப்படும்.
கடைசியாக, விருப்பம் 4ன் கீழ், பாலிசிதாரர் 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 15% காப்பீட்டுத் தொகையைப் பெறுவார், மேலும் உறுதியளிக்கப்பட்ட தொகையில் 25% முதிர்வு நன்மையாக வழங்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“