இந்த சலுகையைப் பெற பி.எப் எண்ணுடன் ஆதாரை இணைப்பது அவசியம்

பிஎப் தொடர்பான புதிய தகவல்கள் மற்றும் விதிமுறைகளில் வரும் மாற்றங்களை தெரிந்துக் கொள்ளலாம்.

By: February 28, 2020, 3:12:56 PM

Link Aadhaar with PF : தொழிலாளர்கள் மற்றும் சந்தாதாரர்களுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் (Employees Provident Fund Organisation EPFO) ஆன்லைன் சேவைகளை பயன்படுத்தி வருங்கால வைப்பு நிதி தொடர்பான சமீபத்திய தகவல்களை புதுப்பித்துக் கொள்ளலாம். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குதாரர்கள் அவர்களுடைய ஆதார் எண்ணை வருங்கால வைப்பு நிதி கணக்கோடு இணைத்துக் கொண்டு வருங்கால வைப்பு நிதி திட்ட விதிகள் குறித்து வரவிருக்கும் தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம்.

2020 ஏன் ஒரு லீப் ஆண்டு? ஏன் நமது முன்னோர்கள் அவற்றில் ஒன்றை தவிர்த்தனர்?

ஒரு வருங்கால வைப்பு நிதி கணக்காளர் தனது வைப்பு நிதி கணக்கு எண்ணை ஆதார் எண்ணோடு இணைத்தது முதல், அவர் வைப்பு நிதி தொடர்பான சமீபத்திய புது தகவல்களை பெறத் துவங்குவார். இபிஎப்ஒ தனது இபிஎப்ஒ ஊழியர்கள், இ.பி.எஃப்.ஒ சந்தாதார்கள் மற்றும் இதர பிஎப் கணக்குதாரர்களுக்கும் ஆன்லைன் சேவைகளை துவங்கியுள்ளது. இந்த ஆன்லைன் சேவையின் மூலம் பிஎப் சந்தாதாரர்கள் தங்களது பிஎப் இருப்பு, பிஎப் பங்களிப்பு மற்றும் இதர பிஎப் தொடர்பான புதிய தகவல்கள் மற்றும் விதிமுறைகளில் வரும் மாற்றங்களை தெரிந்துக் கொள்ளலாம். எனினும் இந்த வகை ஆன்லைன் சேவைகளை பெற கணக்குதாரர் தனது ஆதார் எண்ணை பிஎப் கணக்கோடு இணைத்துக் கொள்வது இன்றியமையாதது.

லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்: சாதனைப் படைத்த ரஜினி, விஜய் பட எடிட்டர்!

ஒருவர் தனது ஆதார் எண்ணை, தனது பி.எப் கணக்கோடு பின்வருமாறு இணைத்துக் கொள்ளலாம்.

epfindia.gov.in எனற இணையதள முகவரியில் உழ்நுழையவும்.

e-KYC Portal என்பதை சொடுக்கவும்

link UAN Aadhaar என்பதை அடுத்து சொடுக்கவும்

உங்கள் UAN எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணை உள்ளீடு செய்யவும்.

ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் (OTP) எண் உங்கள் கைபேசி எண்ணுக்கு வரும். அதை உள்ளீடு செய்யவும்.

அடுத்து 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளீடு செய்யவும்.

submit என்பதை சொடுக்கவும்.

அடுத்து பதிவு செய்யப்பட்ட கைப்பேசிக்கு வந்துள்ள ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் (OTP) எண்ணை உள்ளீடு செய்து உங்கள் ஆதார் எண்ணை வருங்கால வைப்பு நிதி கணக்குடன் இணைக்கவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Link aadhaar with epfo provident fund account

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X