10.65% வட்டியில் தனிநபர் கடன்: 10 வங்கிகளின் லிஸ்ட் இதோ
குறைந்த வட்டியில் தனிநபர் எனப்படும் பெர்சனல் லோன்கள் வழங்கும் 10 வங்கிகள், அதன் வட்டி விகிதங்கள் குறித்து இங்கு பார்க்கலாம். பொதுவாக தனிநபர் கடன்கள் சிபில் மதிப்பெண்..
தனிநபர் கடன்கள் பெறுவது சம்பளதாரர்களுக்கு எளிதானது. 3 மாதம் சம்பள ரசீது, வங்கி ஸ்டேட்மெண்ட் மற்றும் புகைப்படம், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். மேலும், உங்கள் தேவைகளுக்கு சிறந்த வங்கியை கண்டறிய பல்வேறு நிறுவனங்கள் வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது புத்திசாலித்தனமானது.
Advertisment
பொதுவாக, கடன் வழங்குபவர்கள் அதிக கிரெடிட் மதிப்பெண்களைக் கொண்ட கடன் வாங்குபவர்களுக்கு குறைந்த வட்டி விகிதங்களை வசூலிக்க முனைகிறார்கள். அதே சமயம் குறைந்த சிபில் மதிப்பெண்கள் உள்ளவர்கள் அதிக விகிதங்களை எதிர்கொள்ள நேரிடும்.
குறைந்த வட்டியில் தனிநபர் கடன்கள் வழங்கும் 10 வங்கிகள்
வ.எண்
வங்கி
வட்டி விகிதம் (%)
01
ஹெச்டிஎஃப்சி வங்கி
10.75% முதல் 24%
02
ஐசிஐசிஐ வங்கி
10.65% முதல் 16.00%
03
எஸ்பிஐ
11.15% முதல் 11.90%
04
கோடக் மகிந்திரா
10.99%
05
இண்டஸ்இந்த் வங்கி
10.25% முதல் 26%
06
பேங்க் ஆஃப் பரோடா
11.40% முதல் 18.75%
07
பஞ்சாப் நேஷனல் வங்கி
11.40% முதல் 12.75%
08
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
11.35% முதல் 15.45%
09
ஐடிபிஐ வங்கி
10.50% முதல் 13.25%
10
ஆக்ஸிஸ் வங்கி
10.65% to 22%
தனிநபர் கடனில் குறைந்த வட்டி விகிதத்தைப் பெற, அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பது முக்கியம். 750க்கு மேல் கிரெடிட் ஸ்கோர் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த வட்டி விகிதங்கள் வழங்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“