Advertisment

குறைந்த வட்டி... SBI வீட்டுக் கடன் வாங்க தேவையான ஆவணங்கள் இவைதான்

நீங்கள் உங்களுக்கான சொந்த வீடு குறித்து கனவு காண்கிறீர்கள் என்றால், எஸ்.பி.ஐயில் வங்கிக் கடன் வாங்க விரும்பினால் இந்த அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்களை உங்களுடன் வங்கிக்கு எடுத்துச் செல்லுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SBI new rules, SBI cash withdrawal

 List Of Documents Required To Avail SBI Home Loan : நீங்கள் சொந்தமாக வீடு கட்ட விரும்புகிறீர்கள் என்றால் சிறந்த சலுகைகளை வழங்கும் வங்கிக் கடன்களை தேர்வு செய்வது மிகவும் அவசியமாக இருக்கும். இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ள பாரத் ஸ்டேட் வங்கி தங்களின் வாடிக்கையாளர்களுக்கு 6.70% வட்டியில் வீட்டுக் கடன்களை தருகிறது. நீங்கள் உங்களுக்கான சொந்த வீடு குறித்து கனவு காண்கிறீர்கள் என்றால், எஸ்.பி.ஐயில் வங்கிக் கடன் வாங்க விரும்பினால் இந்த அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்களை உங்களுடன் வங்கிக்கு எடுத்துச் செல்லுங்கள்

Advertisment

நீங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை

முழுவதுமாக பூர்த்தி செய்யப்பட்ட வீட்டுக்கடன் படிவம், மூன்று பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்

பான், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை

வீட்டு முகவரி ஆவணம் / சமீபத்தில் நீங்கள் மின்சார கட்டணம் கட்டிய ரசீது, டெலிபோன் பில், தண்ணீர் வரி கட்டிய ரசீது, பாஸ்போர்ட் நகல், ஆதார் அடையாள அட்டை நகல், ஓட்டுநர் உரிமம் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்று

நீங்கள் வீடு கட்டும் இடம் தொடர்பான ஆவணங்கள்

கட்டுமானத்திற்கான அனுமதி


விற்பனைக்கு பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தம்/ஒதுக்கீட்டு கடிதம் (மகாராஷ்ட்ராவில் மட்டும்)
ஆக்குபன்சி சான்றிதழ்

பராமரிப்பு பில், மின்சார கட்டணம், சொத்து வரி ரசீது

அங்கீகரிக்கப்பட்ட திட்ட நகல் (ஜெராக்ஸ் ப்ளூபிரிண்ட்) மற்றும் பில்டரின் பதிவு செய்யப்பட்ட வளர்ச்சி ஒப்பந்தம்

பில்டர் அல்லது விற்பனையாளருக்கு செய்யப்பட்ட அனைத்து கொடுப்பனவுகளையும் காட்டும் கட்டண ரசீதுகள் அல்லது வங்கி கணக்கு அறிக்கை

வங்கிக் கணக்கு தொடர்பான ஆவணங்கள்

கடந்த ஆறு மாதங்களுக்கான பேங்க் அக்கௌண்ட் ஸ்டேட்மெண்ட்

இதற்கு முன்பு வேறெந்த வங்கிகளும் கடன் வாங்கியிருந்தால் அந்த கடன் தொடர்பான கணக்கு மற்றும் விபரங்கள்

வருமான ஆதாரம்

மூன்று மாதங்களுக்கான மாத சம்பள சான்றிதழ்

கடந்த இரண்டு வருடங்களுக்கான படிவம் 16 இன் நகல் அல்லது கடந்த இரண்டு நிதியாண்டுகளில் வருமான வரித் துறையால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஐடி வருமானத்தின் நகல்

சம்பளம் வாங்காத விண்ணப்பதாரர்கள் எனில்

தொழில் நடைபெறும் இடத்தின் முகவரி சான்று

கடந்த மூன்று ஆண்டுகளுக்கான ஐ.டி. ரிட்டர்ன்ஸ்

கடந்த மூன்று ஆண்டுகளாக இருப்புநிலை, லாபம் மற்றும் இழப்பு கணக்கு

வணிக உரிம விவரங்கள் (அல்லது அதற்கு சமமானவை)

TDS சான்றிதழ் (படிவம் 16A - பொருந்தினால்)

தகுதி சான்றிதழ் (ஒரு சி.ஏ/ மருத்துவர் அல்லது பிற நிபுணர்களுக்கு)

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sbi Home Loans
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment