Fixed Deposits | இந்தியாவில் முதலீட்டாளர்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்ய பெரிதும் விரும்புகிறார்கள். வங்கிகளும், குறுகிய கால மற்றும் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு எளிதாக்க, 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலவரையறையுடன் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை வழங்குகின்றன.
அந்த வகையில், குறுகிய கால வைப்பு காலம் 7 நாள்கள் முதல் 12 மாதங்கள் வரை இருக்கலாம். நீண்ட கால வைப்புத்தொகை 1 வருடம் முதல் 10 ஆண்டுகள் வரை இருக்கும்.
இதற்கு வழங்கப்படும் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் காலத்தைப் பொறுத்து வங்கிக்கு வங்கி மாறுபடும்.
இத்தகைய குறுகிய கால ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களைப் பார்ப்போம்.
பொதுத்துறை வங்கிகள்
கனரா வங்கி
கனரா பொது குடிமக்களுக்கு 7 நாள்கள் முதல் ஒரு வருடம் வரை 4% முதல் 6.85% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) பொது குடிமக்களுக்கு 7 நாள்கள் முதல் ஒரு வருடம் வரையிலான டெபாசிட்களுக்கு 3% முதல் 7% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) பொது குடிமக்களுக்கு 7 நாள்கள் முதல் ஒரு வருடம் வரை 3% முதல் 5.75% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.
தனியார் வங்கிகள்
யெஸ் வங்கி
யெஸ் வங்கி பொதுக் குடிமக்களுக்கு 7 நாள்கள் முதல் ஒரு வருடம் வரையிலான டெபாசிட் காலத்திற்கு 3.25% முதல் 7.25% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியானது பொதுக் குடிமக்களுக்கு 7 நாள்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திற்கு 3% முதல் 6.00% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.
ஹெச்.டி.எஃப்.சி. வங்கி
ஹெச்.டி.எஃப்.சி (HDFC) வங்கியானது பொதுக் குடிமக்களுக்கு 7 நாள்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திற்கு 3% முதல் 6.00% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.
ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள்
சூர்யாதோய் (Suryoday) ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
சூர்யாதோய் (Suryoday) ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, பொது குடிமக்களுக்கு 7 நாள்கள் முதல் ஒரு வருடம் வரையிலான டெபாசிட்டுக்கு 4% முதல் 6.85% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.
ஜனா ஸ்மால் ஃபனான்ஸ்
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் பொது குடிமக்களுக்கு 7 நாள்கள் முதல் ஒரு வருடம் வரை 3% முதல் 8.50% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (SFB) பொது குடிமக்களுக்கு 7 நாள்கள் முதல் ஒரு வருடம் வரையிலான டெபாசிட்டுக்கு 4.50% முதல் 7.85% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“