loan apply online loan apply : பொருளாதாரத்தில் பின் தங்கியவரா நீங்கள்? குடும்பத்தில் ஒருவருக்கு தொழில் தொடங்க அரசு சார்பில் கடன் வழங்கப்படுகிறது. அதுவும் ஆன்லைனில் விண்ணப்பித்தால் போதும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுக் குறித்து முழு விபரத்தை தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
loan apply online loan apply: யாருக்கெல்லாம் லோன்
இந்த கொரோனா ஊரடங்கால் மிடில் கிளாஸ் குடும்பங்களின் பொருளாதார நிலை மிகவும் பின் தங்கியுள்ளது. அதிலும் சிறு, குறு தொழில் செய்பவர்கள் பற்றி கேட்கவே வேண்டாம். இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டி தவிக்கும் குடும்பங்கள் அரசின் இந்த அற்புதமான திட்டத்தை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.அதுமட்டுமில்லை தெரியாதவர்களுக்கும் முடிந்த வரை பகிருங்கள்.
சிறுபான்மையின மக்கள், சுயதொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்.அதுமட்டுமில்லை, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள், ஜெயின் பிரிவை சார்ந்த சிறுபான்மையின மக்கள், சுயதொழில் மேற்கொள்ள குறைந்த வட்டி விகிதத்தில், தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதி கழகத்தின் மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முறையில் குடும்பத்தில் ஒருவருக்கு கண்டிப்பாக கடன் வழங்க்கப்படும்.
விண்ணப்பதாரர், 18 முதல், 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.
அதே போல், எந்த தொழில் செய்வதற்காக, விண்ணப்பித்து கடன் பெறுகிறீர்களோ, அந்த தொழிலை செய்வதற்கு தான் கடன் தொகையை பயன்படுத்த வேண்டும். வேறு காரணங்களுக்காக, கடன் தொகையைப் பயன்படுத்தக் கூடாது. தவறான தகவல்கள் அளித்து விண்ணப்பதாரர் கடன் உதவி பெற்றது தெரியவந்தால், அளிக்கப்பட்ட கடன் உத்தரவு ரத்து செய்யப்பட்டு விடும்.
hdfc வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை முற்றிலும் இலவசம்! தெரியுமா?
பெற்ற கடன் தொகை உடனே மொத்தமாக வசூலிக்கப்படும். ஆதார் அட்டை நகல், ஜாதி சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ் நகல், வருமான சான்றிதழ் நகல் உட்பட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். https://www.tamco.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.