ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு எதிரான கடன்கள் (FD) சமீப மாதங்களில் அதிகரித்து உள்ளன. இது குறித்து, சவுத் இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான முரளி ராமகிருஷ்ணன் கூறுகையில், "தற்போது கிடைக்கும் அதிக வட்டி பலனைப் பெற வாடிக்கையாளர்கள் இந்த முறையைப் பயன்படுத்துவார்கள் என்று நாங்கள் நினைக்கிறோம்” என்றார்.
இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) தரவு, எஃப்டிகளுக்கு எதிரான வங்கிக் கடன்கள் அக்டோபரில் ஆண்டுக்கு ஆண்டு 43.4% அதிகரித்துள்ளன.
பொதுவாக, டெபாசிட் மீதான கடனுக்கான வட்டி விகிதம் டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை விட 1-2% அதிகமாக இருக்கும்.
HDFC வங்கி, ஃபெடரல் வங்கி மற்றும் கரூர் வைஸ்யா வங்கி ஆகியவை அதன் வாடிக்கையாளர்கள் தங்கள் வைப்புத் தொகையில் 90% வரை கடன் வாங்க அனுமதிக்கின்றன.
ஆக்சிஸ் வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு ரூ.25,000-க்கு மேல் கடன் வாங்க அனுமதிக்கின்றன.
கடன் வாங்குபவர்களைப் பொறுத்த வரையில், டெபாசிட்டுகளுக்கு எதிரான கடனுக்கான வட்டி விகிதம் பொதுவாக தனிநபர் கடன்களை விட 3-5% குறைவாக இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/