Advertisment

Home Loan : வீட்டுக்கடன் குறித்து சந்தேகங்கள் உள்ளதா? உங்களின் கேள்விக்கு பதில் இங்கே!

Home loan queries; Cannot get PMAY subsidy now as scheme closed on March 31, 2021: நீங்கள் வீட்டுக் கடன் வாங்கி இருந்து, தற்போது திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் கடனுடன் சேர்த்து வீட்டை விற்கலாம்

author-image
WebDesk
Jun 30, 2021 15:28 IST
Home Loan : வீட்டுக்கடன் குறித்து சந்தேகங்கள் உள்ளதா? உங்களின் கேள்விக்கு பதில் இங்கே!

வீட்டுக் கடன் பற்றிய சந்தேகங்களும் விளக்கங்களும் உங்களுக்காக…

Advertisment

PMAY திட்ட மானியம்

PMAY திட்டத்தின் கீழ் வீட்டுக்கடன் பெற விண்ணப்பித்தவர்களுக்கு இனிமேல்  மானியம் கிடைக்காது. PMAY இன் கீழ் உள்ள CLSS திட்டமானது மார்ச் 31, 2021 வரை மட்டுமே நீட்டிக்கப்பட்டது. இப்போது வரை, இந்த திட்டம் நீட்டிப்பு செய்யப்படும் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வரவில்லை. PMAY மானியத்திற்கு மாற்றான வேறு திட்டங்களும் தற்போது கிடைக்கவில்லை. ஈ.டபிள்யு.எஸ் அல்லது எல்.ஐ.ஜி மற்றும் எம்.ஐ.ஜி பிரிவினரிடையே அதிகரித்து வரும் வீட்டுவசதி தேவையை நிவர்த்தி செய்ய மத்திய அரசு பி.எம்.ஏ.ஐ.க்கு பதிலாக மற்றொரு திட்டத்தை கொண்டு வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஈ.எம்.ஐ குறைப்பு மற்றும் கடன் கால அளவு நீட்டிப்பு

சாதாரண சூழ்நிலைகளில் வங்கிகள் ஈ.எம்.ஐ குறைத்து செலுத்த அனுமதித்தல் மற்றும் கடனுக்கான கால அளவை நீட்டித்தல் போன்ற வசதிகளை செய்வதில்லை. ஆனால் 2020 முதல் கொரோனா காரணமாக பலர் வேலை இழந்துள்ளனர். எனவே சில வங்கிகளும் மட்டும், சில வாடிக்கையாளர்களுக்கு ஈ.எம்.ஐ குறைப்பு மற்றும் கடன் கால அளவு நீட்டிப்பு ஆகியவற்றை அனுமதித்துள்ளன. நீங்கள் கடன் பெற்று இருக்கும் வங்கி இந்த வாய்ப்புகளை என்றால், நீங்கள் உங்கள் குடும்ப வருமானம் மற்றும்  வேலையிழப்பு பற்றிய விவரங்களைக் கொண்டு வங்கியிடம் கோரிக்கை வைக்கலாம்.

கிரெடிட் கார்டு

நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் கடன் வாங்கி இருந்து, வேலையிழப்பின் காரணமாக கடனை முழுவதுமாக திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், உங்களிடம் கூடுதல் பணம் கிடைத்தவுடன், ஒரு சிறிய தொகையாக இருந்தாலும், குறைந்தபட்ச தொகையை விட அதிகமாக செலுத்த முயற்சி செய்யுங்கள். ஏனெனில், கிரெடிட் கார்டு தாமதமான கட்டணம் அதிகபட்சமாக சுமார் 35% வட்டியை வசூலிக்கிறது. இதற்கு மாற்றாக, 15% வட்டி விகிதத்தைக் கொண்ட தனிநபர் கடனுக்காக உங்கள் வங்கியை அணுகலாம். இந்த தனிநபர் கடன் அதிக வட்டியை வசூலிக்கும், உங்கள் கிரெடிட் கார்டின் நிலுவைத் தொகையை செலுத்த பயன்படுத்தப்படலாம். ஆனால் இந்த தனிநபர் கடன் பணத்தை பிற நோக்கங்களுக்காகவோ அல்லது வாழ்க்கைச் செலவுகளுக்காகவோ பயன்படுத்த வேண்டாம்.

கடனில் உள்ள வீட்டையும் விற்கலாம்

நீங்கள் வீட்டுக் கடன் வாங்கி இருந்து, தற்போது திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் கடனுடன் சேர்த்து வீட்டை விற்கலாம். ஆனால் வீடு மீதான கடனின் விவரங்களை வாங்குபவருக்கு சொல்ல வேண்டும். மேலும், வீடு விற்கும் தகவலை நீங்கள் கடன் வாங்கிய வங்கியிடம் தெரியப்படுத்த வேண்டும். அடுத்து உங்கள் வீட்டை வாங்குபவர் முதலில் உங்கள் கடனை அடைப்பார். இதனால் வங்கி உங்கள் ஆவணங்களை வாங்குபவருக்கு வழங்கும். மேலும் சொத்தின் முழு உரிமையைப் பெற அவர் மீதமுள்ள தொகையை உங்களுக்கு செலுத்த வேண்டும். ஒரு வேளை வாங்குபவரும் கடன் வாங்கினால், வாங்குபவருக்கு கடன் கொடுக்கும் நிறுவனத்திற்கு ஆவணங்கள் வழங்கப்படுகின்றன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Home Loans #Business
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment