scorecardresearch

அவசரத்திற்கு உதவும் நகைக் கடன்: எந்த வங்கியில் குறைந்த வட்டி தெரியுமா?

தனிநபர் கடன் போன்ற பாதுகாப்பற்ற வழிமுறைகளை கொண்டவையாக அல்லாமல், குறைந்த அளவிலான வட்டி விகிதங்கள், விரைவான மற்றும் சிக்கல் இல்லாத தள்ளுபடி முறைகள் ஆகியவற்றால் இந்தியாவில், தங்க நகைக் கடன் பிரபல நிதிச் சேவையாக மாற்றியிருக்கிறது.

அவசரத்திற்கு உதவும் நகைக் கடன்: எந்த வங்கியில் குறைந்த வட்டி தெரியுமா?

உலக நாடுகளை காட்டிலும், இந்தியாவில் தங்கத்தின் மீதான முதலீடு மிக அதிகம். சேமிப்பு என்றாலே பெரும்பான்மையான பெண்களின் விருப்பம், தங்கத்தின் மீதான முதலீடு தான். தங்க நகைகள் சேமிப்புக்கான பொருளாக மட்டுமல்லாமல், ஆபத்துக்கு உதவும் பொருளாகவும் இருந்து வருகிறது.

நமது அவசர தேவைகளுக்காக, கையில் பணம் இல்லாத சூழலில், தங்க நகைகளை அடகுக் கடைகளிலோ அல்லது வங்கிகளிலோ அடகு வைத்து பணம் பெறுவோம். தற்போதைய சூழலில், பெரும்பாலானோர் நகைக் கடன்களைப் பெற வங்கிகளை நாடிச் செல்கின்றனர். பெரும்பாலானோர், நகைகளை விவசாயக் கடனில் வைத்து பணம் பெறுகின்றனர். விவசாயக் கடனாக இல்லாத பட்சத்தில், நகைக் கடன்களை எந்த வங்கியில், எவ்வளவு வட்டியில் வைக்கிறோம் என்பதை முதலில் அறிந்துக் கொள்ள வேண்டும்.

கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சீர் செய்யவும், மக்களிடம் பணப் புழக்கத்தை அதிகரிக்கவும் நகைக்கடன் மீது வழங்கப்படும் கடன் தொகையை 70% முதல் 95% வரை அதிகரிக்க மத்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

தனிநபர் கடன் போன்ற பாதுகாப்பற்ற வழிமுறைகளை கொண்டவையாக அல்லாமல், நகைக் கடன் திட்டம் குறைந்த அளவிலான வட்டி விகிதங்கள், விரைவான மற்றும் சிக்கல் இல்லாத தள்ளுபடி முறைகள் ஆகியவற்றால் இந்தியாவில், தங்க நகைக் கடன் பிரபல நிதிச் சேவையாக மாற்றியிருக்கிறது. நகைக் கடன்கள் மக்களின் அவ்வப்போது ஏற்படும் தேவைகளை பூர்த்தி செய்ய உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

நகைக் கடன் பெறும் முன், தங்களின் நகை மீதான கடன் தொகை உங்களது தேவைகளை பூர்த்தி செய்வதாக இருக்கிறதா என கவனிக்க வேண்டும். மேலும், கடன் தொகையை பெறுவதற்கு முன், நகைக் கடன்களை திருப்பி செலுத்துவதற்கான வழிமுறைகளையும், விதிகளையும் கடன் வல்லுநர்களின் மூலம் அறிந்து கொள்வது அவசியமானது. இது, உங்களின் கடன் மீதான அபராதங்களை தவிர்க்க உதவும்.

மேலும், நாட்டின் முன்னனி வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் நகைக் கடன் கொள்கைகளையும், வட்டி விகித விவரங்களையும் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். இது, அந்த வங்கிகளின் தனிப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் எதிர்கால மாறுதலுக்கு உட்படலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Looking for a gold loan check out the cheapest interest rates banks and nbfcs are offering tamil