Advertisment

மிகக் குறைந்த வட்டியில் ஹோம் லோன்... நீங்கள் அறிய வேண்டிய முக்கிய அம்சங்கள் இவை!

Looking for cheapest home loan? Check out best deals and important things to keep in mind: வீட்டு கடன் வாங்க நினைக்கிறீர்களா… பண்டிகை காலங்களில் வங்கிகள் வழங்கும் இந்த சலுகைகளை கவனியுங்கள்

author-image
WebDesk
New Update
மிகக் குறைந்த வட்டியில் ஹோம் லோன்... நீங்கள் அறிய வேண்டிய முக்கிய அம்சங்கள் இவை!

பலர் பெரிய செலவுகளைச் செய்வதற்கு அல்லது முக்கியமான வாழ்க்கை இலக்குகளை அடைவதற்கு பண்டிகை காலங்களை நல்லதாக கருதுகின்றனர். அதிகரித்த கடன் தேவையின் காரணமாக வீட்டுக் கடன் வழங்குபவர்கள் பண்டிகை காலங்களில் வட்டி விகிதங்கள் மற்றும் செயலாக்க கட்டணங்களில் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குகிறார்கள்.

Advertisment

இந்த சலுகைகள் ஒரு வீட்டுக் கடனின் ஒட்டுமொத்த கடன் செலவில் கணிசமான சேமிப்பை ஏற்படுத்தும் என்பதால், வீட்டுக் கடன் வாங்க நினைப்பவர்கள் இந்த பண்டிகை காலங்களில் வீட்டுக் கடனைப் பெறலாம். வீட்டுக் கடனைப் பெறுவதன் மூலம் ஒருவரின் கனவு வீட்டை வாங்குவதற்கான சரியான நேரமாக இது இருக்கலாம், ஏனெனில் வீட்டுக் கடன்கள் தற்போது 15 வருட குறைந்த வட்டி விகிதத்தில் கிடைக்கின்றன, இது நிலையான வீட்டு விலைகள் மற்றும் டெவலப்பர்களிடமிருந்து கவர்ச்சிகரமான பண்டிகை சலுகைகளுடன் இணைந்து வீட்டு வாங்குபவர்களுக்கு நல்ல ஒப்பந்தமாக உள்ளது.

இருப்பினும், வீட்டுக் கடனைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு சில முக்கிய விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.

"பல வீட்டுக் கடன் வழங்குபவர்கள் கடன் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த வட்டி விகிதங்களை வழங்குகின்றனர். எனவே, பண்டிகை காலங்களில் வீட்டுக் கடன்களைப் பெறத் திட்டமிடுபவர்கள் வங்கிகள் மற்றும் NBFC களைத் தொடர்பு கொள்ள வேண்டும். மேலும் கடன் வாங்குபவர்கள் எந்த வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் கணக்கு வைத்துள்ளார்களோ அவர்களிடம் அணுக வேண்டும் என Paisabazaar.com வீட்டு கடன் பிரிவு தலைவர் ரத்தன் சௌத்ரி கூறுகிறார்.

விண்ணப்பதாரரின் கிரெடிட் ஸ்கோர், மாதாந்திர வருமானம், வேலை விவரம், நிறுவனத்தின் சுயவிவரம் போன்றவற்றின் அடிப்படையில் பரந்த அளவிலான கடன் வழங்குநர்களிடமிருந்து கிடைக்கும் பல்வேறு வீட்டுக் கடன் சலுகைகளை ஒப்பிட்டுப் பெற கடன் பெறுபவர்கள் ஆன்லைன் நிதி சந்தைகளுக்குச் செல்ல வேண்டும்.

"வீட்டுக் கடன் வாங்குவோர் பல்வேறு வீட்டுக்கடன் விருப்பங்களை ஒப்பிடும் போது செயலாக்கக் கட்டணம் மற்றும் கடன் கால அளவை ஒப்பிட வேண்டும். செயலாக்கக் கட்டணம் வீட்டுக் கடனின் ஒட்டுமொத்த கடன் செலவை கணிசமாக உயர்த்தலாம், அதேசமயம் கடன் கால அளவானது, EMI அளவு மற்றும் கடன் வாங்குபவரின் ஒட்டுமொத்த வட்டி செலவை பாதிக்கும். உதாரணமாக, நீண்ட காலத்தை தேர்வு செய்வது குறைந்த இஎம்ஐ -க்கு வழிவகுக்கும் ஆனால் அதிக வட்டி செலவாகும், அதேசமயம் குறுகிய காலத்தை தேர்ந்தெடுப்பவர்களுக்கு நேர்மாறாக இருக்கும், ”என்று சவுத்ரி தெரிவிக்கிறார்.

வீட்டுக் கடன் வழங்குபவர்கள், புதிய வீட்டுக் கடன் உட்பட உங்கள் மொத்த EMI கடமைகளுடன், அவர்களின் மாத வருமானத்தில் 50% க்குள் கடன் வழங்க விரும்புகிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, வீட்டுக் கடன் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் இஎம்ஐ கால்குலேட்டர்களைப் பயன்படுத்தி தங்கள் இஎம்ஐ அளவு மற்றும் தவிர்க்க முடியாத நிதி இலக்குகளை கவனத்தில் கொண்டு அதன் பிறகு உகந்த இஎம்ஐக்களைக் கண்டறிந்து அதற்கேற்ப தங்கள் வீட்டுக் கடன் காலத்தை தேர்வு செய்ய வேண்டும்.

முன்னணி வங்கிகள் மற்றும் HFC களால் தற்போது வழங்கப்படும் மலிவான வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள்:

publive-image

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business Home Loans
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment