New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/12/idea.jpg)
எஸ்.பி.ஐ
State Bank of India Deposit Schemes Interest Rates: இதில் பெண்களுக்கு அதிகச் சலுகைகள் உண்டு.
எஸ்.பி.ஐ
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ தங்களது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சலுகைகள் ஏராளம்.
பொதுவாக அடித்தளத்தில் இருக்கும் மக்கள் முதல் கோடிக்கணக்கில் பணம் பார்க்கும் தொழிலதிபவர்கள் வரை பலரும் தங்களது பணத்தை வருங்காலத்திற்காக சேர்ப்பது வங்கியில் தான்.
ஆனால் தேவை மற்றும் வசதிக்கேற்ப வங்கிகள் மாறுபடலாம். அதே போல் வங்கிகளில் அக்கவுண்ட் தொடரும் பலரும் நீங்கள் தொடர இருக்கும் சேமிப்பு கணக்குகள், பிக்சட் டெபாசிபட், வீட்டுக்கடன் போன்றவற்றிற்கு எவ்வளவு சலுகைகள் தருகின்றன, எந்த மாதிரியான வசதிகளை ஏற்படுத்தி தருகின்றன போன்றவற்றை விரிவாக தெரிந்துக் கொள்வதில்லை.
இத்தனை தகவல்களையும் அடங்கிய வங்கியின் மெனு புத்தகத்தை தந்தால் அதை பலரும் முழுமையாக படிப்பதும் இல்லை. இந்த குழப்பத்தில் இருந்து முடிந்த வரையில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் எஸ்பிஐ வங்கியில் அளிக்கப்படும் திட்டம் சார்ந்த சலுகைகள் குறித்த விளக்கம் இதோ..
எஸ்பிஐ தங்களது வாடிக்கையாளர்களுக்கு 8.30 சதவீதம் முதல் 5.60 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தின் அடிப்படையில் வீட்டுக் கடனை அளிக்கின்றது. இதில் பெண்களுக்கு அதிகச் சலுகைகள் உண்டு.
ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றால் குறைந்தபட்சம் 855 முதல் 847 ரூபாய் தவணையில் கடனை அடைக்கலாம். கடன் பெறும் தொகையில் 0.35% அல்லது 10,000 ரூபாயுடன் ஜிஎஸ்டி 18 சதவீதம் அல்லது குறைந்தபட்சம் 2000 ரூபாய் உடன் ஜிஎஸ்டி செயல்பாட்டுக் கட்டணமாக வசூலிக்கும்.
எஸ்பிஐ வங்கி வழங்கும் இந்தக் கடன் பேக்கேஜ் ஆனது 50 சதவீதத்திற்கும் அதிகமாக ஒரு நிறுவனத்தில் பங்கு வைத்திருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் கடன் அளிக்கும். 2 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலாகக் கடன் பெறும் போது 0.5 சதவீதத்தை வட்டி விகிதத்தில் கடன் அளிக்கப்படும். என்ன தொழிலிற்காகக் கடன் பெறுகிறார்கள் என்பதைப் பொருத்துச் சலுகைகள் மாறும்.
3. 1 கோடிக்கும் கீழ் எஸ்பிஐ வங்கியில் பிக்சட் டெபாசிடதிட்டத்தில் இணைந்தவர்களுக்கு சென்ற வாரம் .05 முதல் 0.10 சதவீதம் வரை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
கே.ஒய்.சி சான்றுகள் இல்லாத 18 வயதுக்கு மேற்பட்டோர் இந்த கணக்கை தொடங்கலாம்.கே.ஒய்.சி சான்றுகள் சமர்ப்பித்த பிறகு பேசிக் சேமிப்பு கணக்காக மாற்றிக் கொள்ளலாம். இதுவும் ஜீரோ பேலன்ஸ் அக்கவுன்ட் தான்ன். ஆனால் அதிகபட்சமாக 50 ஆயிரம் மட்டுமே டெபாசிட் செய்ய முடியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.