SBI, SBI ATM, SBI atm card, sbi debit cards, sbi credit cards, SBI online, online SBI, onlinesbi.com, sbi.co.in, State Bank of India, SBI cards, SBI EMV card, EMV full form, எஸ்பிஐ, ஏடிஎம் கார்டு, எஸ்பிஐ ஏடிஎம், எஸ்பிஐ ஆன்லைன். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
ATM - Credit Card : பாயிண்ட் ஆப் சேல் முனையங்கள் (PoS terminals) கடைகளில் எளிதாக கிடைப்பதாலும், பணம் இல்லா பரிவர்த்தனை எளிதாக இருப்பதாலும், நகர்புற பகுதிகளில் உள்ள மக்கள் கடன் அட்டை மற்றும் பற்று அட்டைகளை (Debit cards) பெரிதும் பயன்படுத்த துவங்கி விட்டனர். கடந்த சில ஆண்டுகளாக அட்டைகள் மூலம் நடைபெறும் பணபரிவர்த்தனைகள் அதிகரிக்க துவங்கி விட்ட நிலையில் வங்கி மோசடிகளும் அதிகரித்து வருகிறது. மோசடி பேர்வளிகள் மக்களை ஏமாற்ற தயாராக இருக்கும் இந்த சமயத்தில் தங்கள் அட்டைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதும் அவசியம்.
அட்டை பாதுகாப்பு திட்டம் Card Protection Plan (CPP) என்பது பல வங்கி மற்றும் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்படும் ஒரு சேவை. இந்த திட்டத்தின்படி உங்கள் அட்டைகள் இழப்பு, திருட்டு அல்லது மோசடிகளில் இருந்து பாதுகாக்கபடுகிறது. உங்களது கடன் மற்றும் டெபிட் அட்டைகள் மட்டுமல்ல உங்களது நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number- PAN) போன்ற ஆவணங்களும் இந்த திட்டங்கள் மூலம் பாதுகாக்கப்படுகிறது. இந்த திட்டங்களின் நன்மைகளை பயன்படுத்திக் கொள்ள வாடிக்கையாளர்கள் அதற்கென நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்தி தங்களது அட்டைகளை காப்பீடு செய்துக் கொள்ள வேண்டும். சேவை மற்றும் காலத்தை பொருத்து வங்கிகள் பலதரப்பட்ட அட்டை பாதுகாப்பு திட்டங்களை வழங்குகின்றன.
பல பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் வெவ்வேறு அட்டை பாதுகாப்பு திட்டங்களை வழங்குகின்றன. பயனர்கள் ஒரு வருடாந்திர தொகையை செலுத்தி இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். சேவை மற்றும் காலத்தை பொருத்து இது போன்ற ஒரு திட்டத்தின் கட்டணம் ரூபாய் 900 முதல் ரூபாய் 2,100 வரை உள்ளது. இந்த திட்டங்கள் உங்கள் கடன் மற்றும் டெபிட் அட்டைகளை திருட்டு, மோசடி, இழப்பு, skimming, counterfeiting, phishing, online usage or PIN-based மோசடிகளில் இருந்து பாதுகாக்கின்றன.
இந்த வகை திட்டங்களின் முக்கியமாக பயன் என்பது, ஒரு 24 மணி நேரமும் 7 நாட்களும் இயங்கக்கூடிய கட்டணமில்லா தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருக்கும். பயனர்கள் தங்கள் அட்டைகளை தொலைத்துவிட்டால் அல்லது அவை திருடப்பட்டு விட்டாலோ இந்த கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொள்ளலாம். வங்கிகள் உடனடியாக உங்களுக்கு அட்டைகளை வழங்கிய நிறுவனங்களான Visa, RuPay or MasterCard போன்றவற்றை தொடர்பு கொண்டு தொலைந்து போன அல்லது திருடப்பட்ட அட்டைகளை உடனடியாக செயலிழக்க செய்துவிடுவார்கள். மேலும் இந்த வகை அட்டை காப்பீடுகள் உங்கள் அட்டைகள் தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டு விட்டாலோ உங்களது அத்தியாவசிய பயணங்கள் மற்றும் உங்கள் தங்கும் செலவு போன்றவற்றையும் கவனித்துக் கொள்வார்கள்.
இந்த வகை அட்டை பாதுகாப்பு திட்டங்களில் உள்ள மற்றோரு முக்கியமாக வசதி, உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ள அனுமதி உண்டு. எந்த வித கூடுதல் கட்டணமும் இல்லாமல்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"