Advertisment

எந்த ஆவணமும் வேண்டாம்.. இலவசமாக பான் கார்டு பெறுவது எப்படி?

பான் கார்டு வைத்திருப்பவர்கள் வருமான வரித் துறையின் ஆன்லைன் வசதியைப் பயன்படுத்தி உடனடி இ-பான் அல்லது தங்கள் பான் கார்டின் டிஜிட்டல் பதிப்பை பதிவிறக்கம் செய்யலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
how to get pan card online, how to get pan card instantly, how to get instant pan card, instant pan card download, pan, instant pan, how to apply for pan, pan through aadhaar, benefits of instant pan, quick pan, benefits of quick pan, quick pan eligibility, instant pan eligibility, permanent account number

PAN கார்டு மிக முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாகும். பான் கார்டு ஆனது KYC-க்கு வசதியானது என்பது மட்டுமல்லாமல், வங்கிக் கணக்கைத் திறப்பது, டெபிட் அல்லது கிரெடிட் கார்டைப் பெறுவது, பணம்-தொடர்பான பெரிய பரிவர்த்தனைகளை மேற்கொள்வது போன்ற பல அன்றாட சேவைகளுக்கும் உதவுகிறது.பான் கார்டு வைத்திருப்பவர்கள் வருமான வரித் துறையின் ஆன்லைன் வசதியைப் பயன்படுத்தி உடனடி இ-பான் அல்லது தங்கள் பான் கார்டின் டிஜிட்டல் பதிப்பை பதிவிறக்கம் செய்யலாம்.

Advertisment

இப்போது, ​​ஆதார் அட்டை வைத்திருந்தால் பயனர்கள் தங்கள் பான் கார்டை கட்டணமின்றி பெறலாம். ஆதார் அடிப்படையிலான eKYC ஐ பயன்படுத்தி, PAN கார்டுகள் உடனடியாக வழங்கப்படும். உங்கள் ஆதார் eKYCஐ நீங்கள் செய்யவில்லை என்றால், இலவச மற்றும் உடனடி PAN கார்டுக்கு நீங்கள் எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என பார்க்கலாம்.

Income Tax e-filing-இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.incometax.gov.in க்குள் நுழைய வேண்டும்.

பின்னர் Our Services என்கிற பிரிவின் கீழ், Instant e-PAN என்கிற விருப்பத்தைத் கிளிக் செய்யவும்.

நீங்கள் முன்பே e-PAN-ஐ பதிவிறக்கம் செய்திருந்தால், Check Status/Download e-PAN என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும். ஒருவேளை முன்னதாக e-PAN-ஐ டவுன்லோட் செய்ததில்லை என்றால் Get new e-Pan என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

பின்னர் கொடுக்கப்பட்ட விருப்பங்களிலிருந்து உங்கள் தேவைக்கேற்ப ஒன்றை தேர்வு செய்ய வேண்டும், பின்னர் continue என்பதைக் கிளிக் செய்யவும்.

இப்போது, உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடுமாறு கேட்டு ஒரு பக்கம் திறக்கும். அதில் உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும்.

உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டவுடன் continue என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும்.

பின்னர், கொடுக்கப்பட்ட இடத்தில் உங்கள் மொபைலில் நீங்கள் பெற்ற OTP-ஐ உள்ளிடவும்.

இப்போது நீங்கள் காணும் பக்கம் உங்களை பற்றிய எல்லா விவரங்களையும் காண்பிக்கும். எல்லா தகவல்களையும் கவனமாக சோதித்த பிறகு, குறிப்பிட்ட இடத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.

பின்னர் உடனடியாக உங்கள் மின்னஞ்சல் இன்பாக்ஸிற்கு உங்களின் இ-பான் வந்து சேரும். அதை உங்கள் தேவைக்கு ஏற்ப பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pan Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment