/tamil-ie/media/media_files/uploads/2021/10/aadhaar-card.jpg)
ஆதார் அடையாள அட்டை
Lost your Aadhaar card? இன்றைய சூழலில் ஆதார் அடையாள அட்டை அனைத்து அரசு சார் நடவடிக்கைகளுக்கும் தேவையான ஒன்றாகும். அரசின் உதவிகளை பெறவும் வங்கி சேவைகளுக்கும் இது மிகவும் கட்டாயமான ஒரு ஆவணமாக பார்க்கப்படுகிறது. கையில் எடுத்துச் சென்று இதனை எங்கேனும் தொலைத்திருந்தால் நம்மால் அதற்கடுத்த சூழலை யோசித்து கூட பார்க்க முடியாது என்பது போல் ஆகிவிடும். ஆனால் இனிமேல் அப்படியான கவலைகள் ஏதும் உங்களுக்கு வேண்டாம். ஏன் என்றால் மிக எளிமையான வழிமுறைகளை பின்பற்றி உங்களின் ஆதார் அட்டையை மீட்டுவிட இயலும்.
முதலில் uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ UIDAI இணையத்திற்கு செல்லவும்
அங்கே “மை ஆதார்” என்ற ஆப்ஷனை ஆதார் சர்வீஸ் பகுதியில் தேர்வு செய்யவும்
அதில் தோன்றும் இரண்டு விருப்பத் தேர்வுகளில் Retrieve Lost or Forgotten EID/UID என்பதை தேர்வு செய்யவும்
உங்களுக்கு உங்களுடைய ஆதார் அடையாள அட்டையை திரும்பப் பெற வேண்டும் என்றால் அதில் மீண்டும் காட்டும் இரண்டு தேர்வுகளில் ஆதார் எண் அல்லது என்ரோல்மெண்ட் எண் என்பதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யவும்
அதில் உங்கள் ஆதார் தொடர்பான தகவல்களை உள்ளீடாக தரவும்
பிறகு வெரிஃபிகேஷனுக்காக கேப்சா தகவல்களை உள்ளீடாக தரவும். பின்பு நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு ஓ.டி.பி. ஒன்று வரும்.
அந்த ஒ.டி.பியை மீண்டும் தளத்தில் உள்ளீடாக கொடுத்து உங்களின் இ-ஆதார் அட்டையை தரவிறக்கம் செய்து கொள்ள இயலும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.