இந்திய குடிமக்களுக்கு பான் கார்டு ஒரு முக்கிய ஆவணமாக இருக்கிறது. குறிப்பாக வருமான வரி செலுத்துவது, வங்கி பரிவர்த்தனைகள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பெறுவதற்கு போன்ற பல விஷயங்களுக்கு பான் கார்டு மிக முக்கிய தேவையாக இருக்கிறது. 10 இலக்கில் உள்ள எண் கொண்ட இந்த பிளாஸ்டிக் பான் கார்ட்டை ஒரு அடையாள ஆவணமாகவும் பயன்படுத்த முடியும். பான் கார்டை ஆதாருடன் இணைப்பது கட்டாயம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இத்தகைய முக்கிய ஆவணமான பான் கார்டை, தொலைந்துவிட்டால் உடனே பதறாதீர்கள். முன்புபோல் பான் கார்டை பெற அலையவேண்டியது இல்லை.
பான் கார்டு வைத்திருப்பவர்கள் வருமான வரித் துறையின் ஆன்லைன் வசதியைப் பயன்படுத்தி 10 நிமிடத்தில் இ-பான் அல்லது தங்கள் பான் கார்டின் டிஜிட்டல் பதிப்பை பதிவிறக்கம் செய்யலாம்.
இ-பான் கார்டை டவுன்லோட் செய்வது எப்படி?
- முதலில் வருமான வரித்துறைக்கான அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.incometax.gov.in க்கு செல்ல வேண்டும்
- அதில், Our Services என்கிற பிரிவின் கீழ், Instant e-PAN என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- அடுத்ததாக ‘New e-PAN’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- அடுத்த திரையில், உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிடுமாறு கேட்கப்படும். அதில் உங்கள் ஆதார் எண்ணை பதிவிட்டு, கீழே உள்ள பாக்ஸில் டிக் செய்துவிட்டு, continue என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
- தொடர்ந்து, ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி எண் வரும். அந்த எண்ணை திரையில் கேட்கப்படும் இடத்தில் பதிவிட வேண்டும்.
- அடுத்த திரையில், உங்களை பான் கார்டின் விவரங்கள் திரையில் தோன்றும். அவற்றை ஒருமுறை சரிபார்த்துவிட்டு, கேட்கப்பட்டுள் இடத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவிட வேண்டும்.
- அவ்வளவு தான், உடனடியாக உங்கள் மின்னஞ்சலுக்கு இ பான் கார்ட் PDF Formatல் அனுப்பப்படும். அதனை டவுன்லோடு செய்து உபயோகித்து கொள்ளலாம்.
- இ பான் கார்ட் ஒப்பன் செய்திட பாஸ்வேர்ட் பதிவிட வேண்டும். உங்களின் பிறந்ததேதி தான் பாஸ்வேர்டாக செட் செய்யப்பட்டிருக்கும்.
இந்த வழிமுறையில் எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த பான் கார்டினை tin – NSDL அல்லது UTIITSL போன்ற இணைய தளங்களிலும் டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஆனால், பான் கார்ட் டவுன்லோடு செய்திட ஆதார் எண் கட்டாயமாகும்.
அசல் பான் கார்ட்டை பயன்படுத்தும் எல்லா இடங்களிலும், தற்போது இ-பான் கார்டையும் தாராளமாக பயன்படுத்தலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil