/tamil-ie/media/media_files/uploads/2021/04/indane-lpg-gas-cylinder-1200.jpg)
LPG cylinders booking : நாளுக்கு நாள் சமையல் எரிவாயு விலை அதிகரித்துக் கொண்டே வருவது நடுத்தர குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விசயம் தான். வருகின்ற வருவாயில் கொஞ்சம் பணத்தை மிச்சம் செய்யலாம் என்று எண்ணுபவர்களுக்கு அங்கும் இங்குமாக விலையேற்றத்தால் பணம் கரைவது கொஞ்சம் வருத்தத்தைக் கூட ஏற்படுத்தும் என்பது உண்மையும் கூட. நீங்களும் இது போன்ற ஒரு இக்கட்டான சூழலில் உழன்றால் நிச்சயமாக இந்த செய்தி உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.
3 Pay 2700 Cashback Offer என்ற திட்டத்தின் கீழ் பேடிஎம் ஒரு சிறந்த ஆஃபரை அறிவித்துள்ளது. அதன்படி நீங்கள் புக் செய்யும் சிலிண்டர்களுக்கு ரூ. 2700 வரையில் கேஷ் பேக் பெற முடியும். கேஷ்பேக் மட்டுமின்றி சிலிண்டர்களை பேடிஎம் மூலம் புக் செய்யும் நபர்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது.
முதன்முறையாக பேடிஎம்மில் சிலிண்டர் புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த அறிமுக சலுகை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்று மாதங்கள், ஒவ்வொரு மாதமும் ஒரு சிலிண்டை புக் செய்யும் நபர்களுக்கு மாதத்திற்கு ரூ. 900 வரையில் கேஷ்பேக் வழங்கப்படும். ஆனால் நினைவில் கொள்ளுங்கள் கேஷ்பேக் மதிப்பானது ரூ. 10 முதல் ரூ. 900 வரை என்பதால் குறைவான பணமும் கேஷ்பேக்காக கிடைக்கும். ஆனால் கேஷ்பேக் உறுதியானது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.