சென்னையில் இன்று 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 19 குறைந்து ரூ.1911க்கு விற்பனையாகிறது.
இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், மாதந்தோறும் 1 ஆம் தேதி பெட்ரோல், டீசல், மற்றும் கியாஸ் விலையை நிர்ணயம் செய்கின்றன.
அந்த வகையில் மே 1 ஆம் தேதி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.19 குறைந்துள்ளது.
இதன்மூலம் சென்னையில் ரூ.1,930-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை, தற்போது ரூ.1911-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் உயர்த்தப்படவில்லை. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 818.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த விலை உயர்வு டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு ஏற்பட மாறுபடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“