சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு: புதிய விலை என்ன?

டிசம்பர் 1 ஆம் தேதி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.26.50 காசுகள் உயர்ந்துள்ளது.

டிசம்பர் 1 ஆம் தேதி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.26.50 காசுகள் உயர்ந்துள்ளது.

author-image
WebDesk
New Update
gas cylinder price

LPG Price in Tamil Nadu 1st December 2023

சென்னையில் 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.26.50 காசுகள் உயர்ந்து, ரூ.1,968.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், மாதந்தோறும் 1 ஆம் தேதி பெட்ரோல், டீசல், மற்றும் கியாஸ் விலையை நிர்ணயம் செய்கின்றன.

அந்த வகையில் டிசம்பர் 1 ஆம் தேதி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.26.50 காசுகள் உயர்ந்துள்ளது.

இதன்மூலம் சென்னையில் ரூ.1,942-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை, தற்போது ரூ.1,968.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment
Advertisements

அதேவேளையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் உயர்த்தப்படவில்லை. 918.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த விலை உயர்வு டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு ஏற்பட மாறுபடும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lpg Gas

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: