/tamil-ie/media/media_files/uploads/2022/05/lpg-2.jpg)
LPG New Rate
Commercial LPG Gas Cylinder Price Today, November 1, 2022: தேசிய தலைநகரில் செவ்வாய்க்கிழமை (நவ.1) ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பயன்படுத்தப்படும் வர்த்தக சமையல் எரிவாயுவின் (எல்பிஜி) விலை சிலிண்டருக்கு ரூ.115.50 குறைக்கப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து, 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை டெல்லியில் இப்போது ரூ. 1744.00 ஆக காணப்படுகிறது. இதற்கு முன்பு ரூ. 1859.50 ஆக இருந்தது.
மற்ற பெருநகரங்களில், கொல்கத்தாவில் வணிகரீதியான எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.1846.00 ஆகவும், மும்பையில் ரூ.1696.00 ஆகவும், சென்னையில் ரூ.1893.00 ஆகவும் உள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், வீட்டுக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. டெல்லியில் மானியம் இல்லாத 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1053.00 என உள்ளது.
நாட்டில் உள்ள எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர்களை வீட்டுக் குடும்பங்களுக்கு வெளிச்சந்தையில் உள்ள விலையில் விற்கின்றன.
இந்த நிலையில், மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் பயனாளிகளுக்கு அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடி பலன் பரிமாற்றம் மூலம் 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்குகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.