/tamil-ie/media/media_files/uploads/2021/04/indane-lpg-gas-cylinder-1200.jpg)
LPG subsidy not credited in bank account? சமையல் எரிவாயு விலை அதிகரித்து வருகின்ற நிலையில், நீங்கள் உங்களின் சமையல் எரிவாயு சிலிண்டரை மானிய விலையில் வாங்கிக் கொள்ளலாம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அனைவருக்கும் மானியம் உங்களின் வங்கி கணக்கிற்கு சென்றுள்ளதா என்பதை எப்படி அறிந்து கொள்வீர்கள்? உங்களுக்கான எளிய வழிகாட்டி இங்கே.
நீங்கள் மானிய விலையில் சிலிண்டரை பெற தகுதியானவர்கள் என்றால் முதலில் உங்களின் ஆதார் கணக்கை உங்களின் வங்கிக் கணக்கோடு இணைக்க வேண்டும். பிறகு உங்களுக்கு மாதம் மாதம் அந்த மானியம் வழங்கப்படும். இந்தியாவில் ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒவ்வொரு விதமாக எல்.பி.ஜி.யின் விலை இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சத்திற்கும் குறைவாக இருப்பவர்கள் இந்த மானியத்தின் மூலம் பலனடையலாம். உங்களின் ஆதார் அடையாள அட்டை இல்லாமல் மானியம் பெறுவது எப்படி? mylpg.in. இணையத்திற்கு செல்லுங்கள். அங்கே உங்களின் விநியோகஸ்தர் நிறுவனத்தை தேர்வு செய்யுங்கள். அதில் Join DBT என்ற பகுதியை தேர்வு செய்யுங்கள். பிறகு அங்கே டி.பி.டி.எல். ஆப்சனை தேர்ந்தெடுங்கள்.
மானியத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இணையமான https://cx.indianoil.in/-க்கு செல்லவும். அதில் சப்சிடி ஸ்டேட்டஸ் என்ற பகுதியை தேர்வு செய்யவும். Subsidy Related (PAHAL), என்ற தேர்வுக்கு சென்று மானியம் கிடைக்கவில்லை என்ற தேர்வை க்ளிக் செய்யவும். பிறகு உங்கள் சிலிண்டருடன் இணைக்கப்பட்டிருக்கும் போன் நம்பரை உள்ளீடாக கொடுத்து மானியத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.