சென்னையில் உள்ள மூன்று மெட்ரோ நிலையங்களில் லுலு ஹைப்பர் மார்க்கெட் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரல், ஷெனாய் நகர் மற்றும் விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையங்களில் ஹைப்பர் மார்க்கெட்கள் அமைக்கப்பட உள்ளன.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) அதிகாரிகள் கூறுகையில், ஷெனாய் நகர் விற்பனை நிலையம் திரு.வி.கா பூங்காவிற்கு கீழே ஒரு லட்சம் சதுர அடியில் விரிவுபடுத்தி அமைக்கப்படும்.
சென்னை சென்ட்ரலில் அமைக்கப்படும் ஹைப்பர் மார்க்கெட் 28,000 சதுர அடியில் அமைக்கப்படும். அதே சமயம் விம்கோ நகர் இடம் 40,000 சதுர அடியில், மெட்ரோவின் பராமரிப்புக் கிடங்கிற்கு மேலே அமைக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
சி.எம்.ஆர்.எல் உடன் இணைந்துள்ள கிரேஸ் சர்வீசஸ், சென்னை சென்ட்ரல் மற்றும் ஷெனாய் நகர் மார்க்கெட் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் தொடங்க திட்டமிட்டுள்ளது. விம்கோ நகர் மார்க்கெட் அதன் பிறகு 3 மாதங்கள் கழித்து தொடங்கப்படும் என கிரேஸ் சர்வீசஸ் பிரதிநிதி ஜி.சார்லஸ் வசந்தகுமார் உறுதிப்படுத்தினார்.
கார் மற்றும் பைக் பார்க்கிங், ரயில் சேவைகளை எளிதாக அணுகுதல் உள்ளிட்ட வசதிகளுக்காக லுலு ஹைப்பர் மார்க்கெட் அமைக்க மெட்ரோ ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டதாக அவர் விளக்கினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil