புத்தாண்டையொட்டி பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மதுரை மல்லி கிலோ ரூ. 2800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மதுரை மலர் சந்தையில் பூக்களின் இன்றைய விலை நிலவரம்:
மதுரை மல்லி கிலோ ரூ.2,800, மெட்ராஸ் மல்லி ரூ.1,000, பிச்சி ரூ.1,300, முல்லை ரூ.1,200, செவ்வந்தி ரூ.160, சம்பங்கி ரூ.280, செண்டு மல்லி ரூ.100, கனகாம்பரம் ரூ.1,500, ரோஸ் ரூ.280, பட்டன் ரோஸ் ரூ.300, பன்னீர் ரோஸ் ரூ.350, கோழிக்கொண்டை ரூ.100, அரளி ரூ.450, தாமரை (ஒன்றுக்கு) ரூ.25 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
”பனிப்பொழிவின் காரணமாக வரத்து பெருமளவு குறைந்துள்ளதால் இந்த விலையேற்றம் உள்ளது. அடுத்த ஓரிரண்டு நாட்கள் இதே விலை நீடிக்க வாய்ப்புள்ளது. மேலும் புத்தாண்டு காரணமாக பூக்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருவதாலும் விலை உயர்ந்துள்ளது” என மாட்டுத்தாவணி மீனாட்சி மொத்த பூ வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் முருகன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“